இந்தியாவில் திருமணம் என்றாலே அதற்கு பெண்கள் தயாராகும் விதம் அளவில்லாதது. குறிப்பாக திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நம் நாட்டில் பெண்கள் பங்கெடுக்கும் பொழுது அதிக ஒப்பனையுடன் தான் செல்வார்கள். அதுவும் மணப்பெண்ணுக்கு சொல்லவே வேண்டாம், பியூட்டி பார்லரில் ஒரு நாள் முழுவதும் மேக்கப்புக்காக செலவிடுவார்கள். உடைகள், மேக்கப் மற்றும் ஆபரணங்கள் போன்ற அனைத்து விஷயங்களிலும் திருமணத்தன்று சிறப்பாக இருக்க வேண்டுமென்றும் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
ஆனால் இங்கு ஒரு மணப்பெண் தன்னுடைய திருமணத்தின்போது தலையில் இருக்கும் நரை முடியை கொஞ்சம் கூட கருப்புச்சாயம் அதாவது டை அடிக்காமல் திருமணம் செய்திருக்கிறார்.
அழகு எல்லா வண்ணங்களிலும் வரும் என்பது போல நடிகர் திலீப் ஜோஷியின் மகள் தனது திருமணத்தில் அதனை அழகாக வெளிப்படுத்தினார்.
நடிகர் திலீப்பின் மகள் நியாதிக்கும், அவரது காதலரான யஷோவர்தன் மிஸ்ராவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. விழாவின் சில படங்களைப் பகிர்ந்து கொண்ட திலீப், இன்ஸ்டாகிராமில் சென்று நியாதிக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வாழ்த்தினார்.
“பாடல்கள் மற்றும் படங்களில் இருந்து நீங்கள் உணர்வுகளை கடன் வாங்கலாம், ஆனால் அது உங்களுக்கு நேரில் நிகழும்போது… அந்த அனுபவம் இணையற்றது. என் மகள் நியதி மற்றும் குடும்பத்தில் புதிதாக நுழைந்த என் மருமகன் யஷோவர்தனுக்கு வாழ்த்துக்கள். இந்த அற்புதமான பயணத்தில் இன்னும் பல! எங்களுடன் இருந்ததன் மூலம் எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி, அல்லது அவர்களின் ஆசீர்வாதத்தை அனுப்புவதன் மூலம் மற்றும் தம்பதியருக்கு நல்வாழ்த்துக்கள்” என்று அவர் எழுதினார்.
திருமணத்தில் நரை முடியுடன் நடிகரின் மகள்
நியாதியின் திருமணப் படங்கள் நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றன, காரணம் அவருக்கு இருந்த நரைமுடியை கொஞ்சம்கூட டை அடிக்காமல் திருமணத்தில் பங்கேற்று இருப்பதுதான்
நியாதியைப் பாராட்டி, சமூக ஊடகப் பயனர் ஒருவர், “நரை முடியை மறைக்காததற்கு நன்றி. அழகான படங்கள்” என்று எழுதினார்.
மற்றொருவர், “திருமண நாட்களில் நரைமுடியை மறைக்காமல் இருக்கும் தைரியம் மணமகளுக்கு உள்ளது. அவரது தைரியத்திற்கு பாராட்டுக்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
குஜராத்தின் பாரம்பரிய முறைப்படி விழா நடைபெற்றது.
கொஞ்சம் News – கொஞ்சம் English
ஜாலியாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
ceremony – விழா
unparalleled – இணையற்றது
entrant – நுழைபவர்
guts – தைரியம்
sanctify – புனிதப்படுத்து
Sandalwood – சந்தனம்
bride – மணப்பெண்
bridegroom – மணமகன்
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |