ஒரு உண்மையை உலகிற்க்கு உணர்த்த விசித்திரமான ஒரு செயலை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் பொழுது நாடாளுமன்றத்துக்குள் அதனை செய்து காட்டினார். அதாவது அவர் ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்க்கு கொண்டு வந்தார். எல்லோரும் அவரையே விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். “ஏன், அதிபர் எதற்க்காக இப்படி கோழியை கொண்டி வந்திருக்கிறார்” என்று மனதிற்க்குள் யோசித்துக்கொண்டார்கள்.
சிறிது நேரம் கழித்து அதிபர் ஸ்டாலின் கோழயின் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். எல்லோரும் அதிபர் செய்வதை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது. ஆனாலும் அதிபர் என்பதால் யாரும் அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை.
கோழியிலிருந்து முற்றிலும் இறகுகளை பிடுங்கிய பின்பு அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார். அது அங்கும் இங்கும் ஓடியது, சிறிது நேரம் கழித்து கோழியின் முன்னால் சிறிது தானியத்தை தூவினார்.
அந்த கோழி அதனை தின்றுக் கொண்டே மெதுவாக தானியத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இப்பொழுது மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார். கோழியும் அதனை பொறுக்கியபடியே நகர்ந்து அதிபரின் காலடியில் வரை வந்து சேர்ந்தது. அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு, அவர்களின் மீது எவ்வளவு சுமையை போட்டாலும் ஒரு சிலர் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் கோழி தானியத்தை நோக்கி வந்தது போல மக்கள் நம்மை நோக்கி வந்து காலடியில் கிடப்பார்கள் என்று கூறினார்.
அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இன்று வரை எல்லா கட்சிகள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து, அவர்களை ஒரு முட்டாளாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இலவசம் என்றால் அது கல்வி, மருத்துவம் என்பதில் மட்டுமே இருக்கவேண்டும்.
போலி வாக்குறுதிகளை நம்பி எப்பொழுதும் வாக்களிக்காதீர்கள். நல்லவர்களை எப்பொழுதும் தேர்ந்தெடுங்கள். நாடு முன்னேற ஒவ்வொரு வாக்கும் முக்கியமே!