உயிர் என்பது அனைவருக்கும் சமமானது இதில் ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஏதாவது ஒரு விபத்தின் பொழுதோ அல்லது அவசரமான மருத்துவ உதவி தேவைப்படும் பொழுது நாம் அழைப்பது ஆம்புலன்ஸ் ஆகும். இப்படி அவசரமாக ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்பொழுது எப்பொழுதும் நாம் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு விட வேண்டும். காரணம் ஆம்புலன்சில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி எவ்வளவு விரைவாக கிடைக்கிறதோ அவ்வளவு உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு ஆகும். ஆனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல்களால் சிலருக்கு மருத்துவ உதவி தாமதமாக கிடைக்கின்றது. இதனால் பல நேரங்களில் பல உயிரிழப்புகளும் நேரிடுகிறது. ஆனால் ஒரு சிலர் போக்குவரத்து நெரிசல்கள் இல்லை என்றாலும் ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுக்கிறார்கள்.
அப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் காரை ஓட்டிய நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
முட்டாள்தனத்தால் கம்பி என்னும் கார் டிரைவர்
திங்கட்கிழமை மாலை, கனச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தக்ஷின கனடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் வெகு நேரமாக ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் ஓட்டுநர் ஒருவர் சாலையின் குறுக்கே காரை ஓட்டிச் சென்றார். ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார் ஆனாலும் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அந்த கார் ஓட்டுநர் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் முன்னே சென்று கொண்டே இருந்தார். ஆம்புலன்ஸில் இருந்த நபரால் அக்காட்சிகளை பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. சைரன் ஒலிக்கு செவி சாய்க்காத கார் ஓட்டுநருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்தன.
பிறகு காவல்துறை அந்த வாகன எண்ணை வைத்து சரன் என்ற அனிமேஷன் நிபுணரை கைது செய்த போலீசார். அவர் மது அருந்தி விட்டு கார் ஓட்டினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சில முட்டாள்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கைக்குறிய பாடங்களைப் படித்திருக்க மாட்டார்கள்.
Fun story (1 minute) – ஒரு ஓட்டல் முதலாளியும் பார்வையற்ற மனிதரும் – படித்தீர்களா?
Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|