கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்தார்.
இவர், கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் சிறிது நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுவதாகவும் முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் தீபா குற்றம் சாட்டினார்.
அவரது ஆராய்ச்சி பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அதோடு அவரை தடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டுமம் என பல்கலைக்கழகத்தின் வாசலில் கடந்த அக்டோபர் 29 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் தாமஸ் தெரிவித்தார்.
இருந்தாலும் மாணவி திப்பவால் மேற்படிப்பை தொடங்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவி தீபா கூறுகையில் ‘’தனது நீதி கோரி 11 நாள், மழையில் உண்ணாவிதரம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தேன். போராட்டத்தில் போலீசார் என்னை தாக்கினார்கள்.
10 வருடமாக போராடும் பட்டியலின மாணவி
Denied a seat, work material, subjected to casteist insults and more humiliation this PhD student in MGU, Kerala, went on a hunger strike to win her rights. She speaks of a few of those harrowing incidents#deepapmohanan pic.twitter.com/AnIQBoYzJx
— Cris (@cristweets) November 19, 2021
அதுமட்டுமல்லாமல், எனது உடல் நிலை சற்று மோசமான நிலையில் உள்ளது. நான் ஒரு இதய நோயாளி. போராட்டதிற்கு பிறகு, கட்டாயமாக முழு நேர ஓய்வில் இருக்க வேண்டும். என்னுடைய மேற்படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் என்னை அனுமதிக்க வேண்டும். இதற்காக, எதுவரை வேண்டுமாலும் நான் போராட தயாராக இருக்கிறேன்.’’ என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-இல் எம்.பில் படிப்பில் சேர்ந்துள்ளார் தீபா. அவரது கூற்றுப்படி கடந்த 2015 வாக்கில் அவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர்கள் உட்பட சில அதிகாரிகள் சாதி ரீதியாக தனக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும், இதனால் தன் முனைவர் பட்டத்தை அவரால் முடிக்க முடியவில்லை.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |