மக்கள் தங்களுக்குப் பிடித்த வாகனத்தின் நம்பர் பிளேட்களைப் பெறுவதற்கு சில சமயங்களில் அதிகப்படியான பணத்தைச் செலவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, 001 அல்லது 007 அல்லது 1234 கூட, மக்களின் விருப்பமானவை. ஆனால் புதிய ஸ்கூட்டியின் நம்பர் பிளேட்டால் மாணவிக்கு நேர்ந்த அவமானம் பற்றி பார்ப்போம். பொதுவாக வண்டி எண்களுக்கு முன்னால் அந்த மாநிலத்தின் குறியீடு TN 09 AW, DL 4C அல்லது UP 16E போன்ற சில முன்னெழுத்துக்கள் இருக்கும், இருப்பினும் வண்டியின் நெம்பர் பிளேட் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவதற்கு காரணமாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
DailyO செய்தியின்படி, டெல்லியில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டியின் நம்பர் பிளேட் காரணமாக அண்டை வீட்டாரால் ‘வெட்கமற்றவள்’ என்று அழைக்கப்படுகிறார். உண்மையில், ஜனக்புரியில் இருந்து நொய்டாவிற்குப் பயணம் செய்வதை எளிதாக்குவதற்காக அவளது தந்தை ஒரு ஸ்கூட்டியைப் பரிசளித்தார். அவள் மெட்ரோ வழியாக பயணம் செய்தாள். ஆனால் ஆர்டிஓ அலுவலகத்தில் வண்டியை ரிஜிட்டர் செய்த பிறகு அவளுடைய வண்டி எண் DL3SEX**** என்று வந்ததால் அவளுடைய கனவுகள் அனைத்தும் நசுங்கின.
இந்தியச் சமூகம் பாலினத்தைப் பற்றி மிகவும் சந்தேகம் கொள்கிறது, ஒரு நம்பர் பிளேட்டில் கூட இந்த வார்த்தையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
புதிய ஸ்கூட்டியின் நம்பர் பிளேட்டால் மாணவிக்கு நேர்ந்த அவமானம்

அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் தன்னை ‘பேஷரம் – बेशर्म (வெட்கமற்ற) என்று அழைத்து கொடுமைப்படுத்துவதாக அந்த பெண் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகனங்களுக்கான தனித் தொடர்களை ஆர்டிஓ துறை வெளியிடுவதால், இந்தப் பிரச்னை விரைவில் தீர்ந்துவிட வாய்ப்பில்லை, அதை மாற்றினால் வரிசைக்கு இடையூறு ஏற்படும். எனவே, ஏழைப் பெண் விரைவில் வண்டியை விற்கவேண்டும் அல்லது வேறு வழியில்லாமல் இந்த வண்டி எண்ணையே தொடர வேண்டும்.
- skeptical – சந்தேகம்
- tolerate – பொறுத்துக்கொள்ள
- harassment – தொல்லை
- exorbitant – மிகையான
- commute – பயணம்
- shameless – வெட்கமற்ற
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |