குஜராத் மாநிலம் பாவ்நகரில் மணப்பெண் மாரடைப்பால் இறக்க அவருக்குப் பதிலாக இளைய சகோதரியை மாப்பிள்ளைக்கு மணமுடித்த பெண்வீட்டார்.
ஒரு பெண்ணின் திருமண நாள் அவருக்கு வாழ்கையில் ஒரு மறக்க முடியாத சந்தோஷ நாளாகும். ஆனால் அதுவே அவருக்கு கடைசி நாளாக மாறியது. குஜராத் மாநிலம் பாவ்நகரில் மணப்பெண் ஒருவர், சுபாஷ்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண சடங்குகளுக்கு நடுவே மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பாவ்நகரில் உள்ள பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடந்துள்ளது. ஹெட்டால் – ஜினாபாய் ரத்தோர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரின் மகள், நரி கிராமத்தைச் சேர்ந்த ராணாபாய் புத்தாபாய் அல்கோதரின் மகன் விஷாலை திருமணம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
திருமணப் பாடல்களை இசைத்து அரங்கத்தில் எல்லோரும் மகிழ்சியில் இருக்கும்போது கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டது. திருமணச் சடங்குகளைச் செய்துகொண்டிருந்தபோது, மணப்பெண் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹெட்டலின் மரணத்திற்கு குடும்பத்தினர் துக்கம் அனுசரித்த நிலையில், திருமண கொண்டாட்டங்களை தொடர்ந்து நடத்த உறவினர்கள் மாற்று திட்டத்தை முன்மொழிந்தனர். மணப்பெண்ணின் தங்கையை அவரது இடத்தில் வைத்து விஷாலை திருமணம் செய்து கொள்ளுமாறு பரிந்துரைத்தனர்.
மணமகள் இறந்ததைத் தொடர்ந்து, அவரது சகோதரியை மணமகனுக்குத் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து, அவரது தங்கையுடன் திருமண சடங்குகளைத் தொடர்ந்தனர். விழா முடியும் வரை ஹெட்டலின் உடல் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாவ்நகர் நகர கார்ப்பரேட்டரும், மால்தாரி சமாஜ் தலைவருமான லக்ஷ்மன்பாய் ரத்தோர் இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. மகளின் மரணத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும், மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் வெறுங்கையுடன் அனுப்பாமல், சமூக உறுப்பினர்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும்படி சமாதானப்படுத்தியதாக அவர் கூறினார்.
கொஞ்சம் News – கொஞ்சம் English
Wedding Rituals – திருமண சடங்குகள்
dizzy – மயக்கம்
nearby – அருகில்
mourn – புலம்பு
reportedly – தெரிவிக்கப்படுகிறது
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459