சினிமாவில் தான் இப்படி எல்லாம் கூட விபத்து நடக்குமா? என்று பார்த்திருப்பீர்கள். Final Destination என்ற சினிமாவில் ஒரு காட்சி வரும், அதில் ஒரு சிறிய இரும்புத்துண்டு பறந்து வந்து ஒருவரை கொல்லும். அது போல சம்பவம் இந்தியாவிலும் நடந்துள்ளது.
ஹிருஷிகேஷ் துபே என்பவர் டெல்லி – கான்பூர் நீலாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெனரல் கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும்பொழுது ஒரு இரும்பு கம்பி ஜன்லை உடைத்துக்கொண்டு வந்து அவரின் கழுத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (நேற்று) வட மத்திய ரயில்வேயின் பிரயாக்ராஜ் பிரிவில் தன்வார் மற்றும் சோம்னா இடையே காலை 8:45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
“ஜெனரல் கோச்சில் பயணம் செய்தவரின் மீது வெளிப்புறத்திலிருந்த வந்த கூரான இரும்பு கம்பி ஜன்னலை உடைத்துக்கொண்டு அவரின் கழுத்தில் பாய்ந்தால் பயணி இறந்தார். கூரான இரும்பு, பெட்டியைப் பிரிக்கும் பகுதியையும் துளைத்துள்ளது. இதனால் ரயில் 09.23 மணி அளவில் அலிகார் சந்திப்பில் நிறுத்தப்பட்டது” என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. ரயில்வே விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில அறிக்கைகளின்படி, சம்பவம் நடந்தபோது தண்டவாளத்தில் சில பணிகள் நடந்து கொண்டிருந்தன. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஜிஆர்பியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொஞ்சம் News! கொஞ்சம் English!
Impale – கூரான ஆயுதம் கொண்டு துளை
freak accident – வினோதமான விபத்து
protrude – நீண்டு
struck – தாக்கியது
pierce – துளைக்க
victim – பாதிக்கப்பட்ட
spokesperson – செய்தி தொடர்பாளர்
mishap – துர்ச்சம்பவம்
Follow us
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |