புது தில்லி: செவ்வாய்கிழமை லைவ் ஸ்ட்ரீமின் போது மும்பை தெருக்களில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண் யூடியூபர் ஹியோஜியோங் பார்க், தனது லைவ் ஸ்ட்ரீமைப் பார்த்தவுடன் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றிய இளைஞர்களுடன் மதிய உணவு சாப்பிடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“இறுதியாக இந்திய வீரர்களுடன் சந்திப்பு” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Finally meeting with Indian heroes💜
— Mhyochi in 🇮🇳 (@mhyochi) December 2, 2022
Be my guess for the lunch today! pic.twitter.com/Um3lOeeciT
ஹியோஜியோங் பார்க் மும்பையின் தெருக்களில் உலா வந்து லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு வாலிபர் அப்பெண்ணிடம் வந்து சில்மிஷம் செய்தார். பார்க், எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார், ஆனால் துன்புறுத்தியவர் மனம் தளரவில்லை. சொல்லப்போனால் அவரின் கையைப் பிடித்து இழுத்து அவரை தன் பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு தன்னுடன் செல்ல முயன்றான்.
லைவ் ஸ்ட்ரீமிங்கில் மும்பையில் பெண் யூடியூபருக்கு நடந்த சில்மிஷம்
Last night on stream, there was a guy who harassed me. I tried my best not to escalate the situation and leave because he was with his friend. And some people said that it was initiated by me being too friendly and engaging the conversation. Makes me think again about streaming. https://t.co/QQvXbOVp9F
— Mhyochi in 🇮🇳 (@mhyochi) November 30, 2022
அவர் எப்படியோ சூழ்நிலையிலிருந்து வெளியேறினார், ஆனால் துஷ்பிரயோகம் செய்தவர்கள் அப்பெண்ணை பின்தொடர முயன்றனர். ஆனால், அதற்குள் அவரது நேரலையை பார்த்துக் கொண்டிருந்த அதர்வா, அந்த இடத்துக்குச் சென்று, அந்தத் தொல்லை செய்தவரை அனுப்பி அப்பெண்ணைக் காப்பாற்றினார்.
மும்பை போலீசார், பார்கிடம் இருந்து முறையான புகார் எதுவும் இல்லாமல், மொபீன் சந்த் முகமது ஷேக் மற்றும் முகமது நகீப் சத்ரேலாம் அன்சாரி ஆகியோரைக் கைது செய்தனர், அவர்கள் அப்பெண்ணை துன்புறுத்தியவர்கள் மற்றும் அவர்களுடன் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் ஆவர்.
தானாக முன்வந்து, கார் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். அவர்கள் மீது ஐபிசியின் 354, 354(டி), மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.
“Not on our streets. Never on our streets”, என்று மும்பை போலீஸ் இன்ஸ்டாகிராமில் எழுதியது.
கொஞ்சம் News! கொஞ்சம் English!
molest – துன்புறுத்தல்
stroll – உலா
somehow – எப்படியோ
molesters – துஷ்பிரயோகம் செய்பவர்கள்
apprehend – கைது
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |