தமிழக அரசு வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல்களை, உங்கள் மொபைல் போனில் pdf files களைப் எப்படி பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அண்மையில் இந்த ஆண்டு நடத்த உள்ள பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை வெளியிட்டதையடுத்து, அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் பலரும் தேர்வுக்கு தயராக ஸ்டடி மெட்டீரியல்களை சேகரிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஸ்டடி மெட்டீரியல் தேடுபவர்கள் தமிழக அரசே அளித்துள்ளது. அதை உங்கள் வீடுகளில் இருந்தே சில நிமிடங்களில் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான படித்த இளைஞர்களின் முதல் விருப்பம் எப்போதும் அரசுப் பணியாகவே உள்ளது. அப்படி அரசுப் பணி விரும்பும் இளைஞர்களுக்காகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 1, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வுகளை அறிவித்து நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அண்மையில் இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது. அதிலும் வி.ஏ.ஓ பணிக்கான குரூப் 4 பணி இடங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால் பலருக்கும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசுப் பணிக்கு முயற்சிக்கும் இளைஞர்கள் பலரும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதற்காக ஸ்டடி மெட்டீரியல்கள் சேகரிப்பது சிலபஸ் மற்றும் நியூ சிலபஸ் தெரிந்துகொள்ளும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.பி.எஸ்.சி ஸ்டடி மெட்டீரியல்களை கூகுள் டிரைவில் வெளியிட்டுள்ளது. அந்த ஸ்டடி மெட்டீரியல்களை, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் மொபைல் போனில் எப்படி பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
குரூப் 4 ஸ்டடி மெட்டிரியல் பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட இணைப்பில் கிளிக் செய்து உள்ளே சென்று உங்களுக்கு தேவையான ஸ்டடி மெட்டீரியல்களை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள். இப்போதே படிக்கத் தொடங்குங்கள்.
Study Materials link(Total file size 55 MB) : https://drive.google.com/drive/folders/1IOL40aLW8-jQRN022DcVxsNr5ACErZE3?sort=13&direction=a
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிப்பதற்கு எல்லா பாடங்களிலும் தமிழக அரசு ஸ்டடி மெட்டீரியல்களை pdf ஆக வெளியிட்டுள்ளது. ஆட்டிடியூட், விலங்கியல், இயற்பியல், வேதியியல், இந்தியன் பாலிட்டி, இந்திய தேசிய இயக்கம், தமிழ் பகுதி உரைநாஇ, தமிழ் பகுதி 2, இந்திய பொருளாதாரம், வரலாறு என எல்லா பாடங்களிலும் மெட்டீரியல்களை வெளியிட்டுள்ளது. இந்த மெட்டீரியல்கல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ன சிலபஸ் அறிவித்துள்ளதோ அதன்படியே இந்த ஸ்டடி மெட்டீரியல்களை கொடுத்திருக்கிறது. இந்த ஸ்டடி மெட்டீரியல் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |