வாழ்வை ரசிக்கத் தெரியாமல் ஒரு சிலர் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் பாதிப்புக்குள்ளாவது என்பதற்கு இந்த ஒரு சம்பவமும் எடுத்துக்காட்டாகும். காதலன் மறுத்ததால் காதலி செய்த காரியத்தை பாருங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியாவில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், தனது தாயின் உதவியுடன் காதலி தனது காதலனை எரித்தார். அந்த பெண் மற்றும் அவரது தாயாரை அம்மாநில போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
காவல்துறையினரின் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட வேத்பிரகாஷ் என்பவர் பலத்த தீக்காயங்களுடன் கடந்த வாரம் ஆகஸ்ட் மாதத்தில் கொத்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தல்வாபாரா கிராமத்திற்கு அருகில் வழிப்போக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக கோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ராய்பூரில் உள்ள கல்ரா பர்ன்ட் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
அவருக்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். “ஆகஸ்ட் 26 அன்று ராய்பூரில் உள்ள கல்ரா பர்ன்ட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று கோட்வாலி காவல் நிலையத்தில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
காதலன் மறுத்ததால் காதலி செய்த காரியத்தை பாருங்கள்
21 வயதான பூஜா பிரதான் மற்றும் அவரது தாயார் பர்மிளா பிரதான் மீது பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்தனர். “வேத்பிரகாஷின் பெற்றோர் அளித்த புகாரில், 21 வயது பெண்ணும் அவரது தாயும் தங்கள் மகன் திருமணம் செய்ய மறுத்ததால், அவர்கள் இருவரும் எங்கள் மகனுக்கு தீ வைத்தனர்.” என்று இறந்த மகனின் பெற்றோர்கள் கூறினார்கள்.
கடந்த சில மாதங்களாக இறந்த அந்த பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று வேதபிரகாஷின் உறவினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். “அவர்கள் நண்பர்கள் மட்டுமே. எனினும், சம்பவத்தன்று, வேத்பிரகாஷின் நண்பர் அவரை அவரது வீட்டிற்கு அழைத்து அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். மேலும், பிரகாஷின் நண்பன் என்று கூறிக்கொண்ட பெண் பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்ய மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் நாங்கள் அறிந்தோம்.
தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அந்த பெண்ணும் அவரது தாயும் வேத்பிரகாஷை தீ வைத்து எரித்ததாக உறவினர் மேலும் கூறினார்.
புகாரைப் பெற்றதும், கொத்வாலி போலீசார் ராய்பூர் போலீஸைத் தொடர்புகொண்டு காதலனிடம் அறிக்கையைப் பெற்றனர். அந்த காதலன் தனது இறக்கும்பொழுது தன்னுடைய அறிக்கையில், அவனும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார். அவர் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண்ணும் அவரது தாயும் அவரை தீ வைத்து கொன்றனர், என்று போலீசார் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவர் மேலும் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு, அவர்கள் வேத்பிரகாஷுக்கு தீ வைத்த நாள் முதல் தலைமறைவாகிவிட்டதை நாங்கள் அறிந்தோம்.
இளைஞர்களைக் கொன்ற தாய்-மகளைப் பிடிக்க ஒரு ரெய்டிங் குழு அமைக்கப்பட்டது. தல்வாரா கிராமத்தில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
Learn some English vocabulary and phrases
A jilted lover – கைவிடப்பட்ட அல்லது ஏமாற்றப்பட்ட காதலன் / காதலி
jilt – திடீர் மற்றும் இரக்கமற்ற வழியில் ஒருவருடனான காதல் உறவை முடிவுக்குக் கொண்டுவர
He was jilted by his fiancée.
அவர் தனது வருங்கால மனைவியால் ஏமாற்றப்பட்டார்.
victim – பாதிக்கப்பட்ட
passersby – வழிப்போக்கர்கள்
nab – கைது செய்
abscond – தலைமறைவு
confession – ஒப்புதல் வாக்குமூலம்
They were only friends.
அவர்கள் நண்பர்கள் மட்டுமே.
The boy had suffered more than 90 percent burn injuries.
சிறுவனுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன.
They had locked their house and had gone in hiding
அவர்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
90 வயது பாட்டி – தொழில் முனைவோர் ஆன கதை
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |