அறுவைசிகிச்சை செய்துகொள்வதும் மற்றும் அழகுசாதன சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதும் தங்களின் சிறந்த தோற்றத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்கு பொதுவானதாகிவிட்டது. ஜப்பானில் உள்ள ஒருவரும் தான் எப்போதும் விரும்பும் தோற்றத்தை அடைய இந்திய மதிப்பில் சுமார் 12 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார். இருப்பினும், அவர் ஒரு பிரபலமான தோற்றத்தை விரும்பவில்லை, அதற்கு மாறாக தன்னை ஒரு நாயாக மாற்றினார். அந்த மனிதன் எந்த மருத்துவ முறைக்கும் செல்லவில்லை, உண்மையில் நடந்தது என்ன? ரூ. 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய நபர் பற்றிய முழுவிவரம் இக்கட்டுரையில் காண்போம்.
ட்விட்டரில் டோகோ ஈவி என அறியப்படும் நபர் தான் செப்பெட் எனும் நிறுவனத்தில் முயற்சியால் நாய் போன்று மாறி இருக்கிறார். இது போன்று மாற வேண்டும் என்பது தன் வாழ்நாள் விருப்பம் என அவர் தெரிவித்து இருக்கிறார். கூலி (collie) எனும் வகையை சேர்ந்த நாய் போன்று ஆடை அணிந்து தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

செப்பெட் நிறுவனம் திரைப்படம், விளம்பரங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சிலைகளை மிக நேர்த்தியாக செய்து கொடுப்பதில் புகழ் பெற்ற ஒன்று ஆகும். சிலைகள் மட்டும் இன்றி உண்மையாகவே காட்சியளிக்கும் வித்தியாசமான உடைகளை செய்வதிலும் செப்பெட் தனிச் சிறப்பு பெற்று இருக்கிறது. இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஒட்டுமொத்த உடையின் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம் வரை செலவாகி இருக்கிறது.
மேலும் இந்த உடையை முழுமையாக செய்து முடிக்க 40 நாட்கள் ஆகி இருக்கிறது. மனிதனாக பிறந்து நாய் போன்று மாறி இருக்கும் டோக்கோ தான், எதற்காக இப்படி செய்தார் என்பதை தனியார் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து வருகிறார்.
ரூ. 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய நபர்
காரணம்:
அந்த வகையில், “என் விருப்பம் மற்றும் உடைக்கு ஏற்ற வகையில் மிக கச்சிதமாக பொருந்துவது கூலி வகை நாய் மட்டுமே. எனக்கு நான்கு கால் விலங்குகளை மிகவும் பிடிக்கும். அதிலும் அவை கியூட்-ஆக இருந்தால் எனக்கு இஷ்டம் அதிகம். இவற்றில், பெரிய விலங்கு அதே சமயம் எனக்கு நெருக்காமான ஒன்றாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். மேலும் அது பார்க்க அசலாகவே இருக்க வேண்டும் என்பதால், நாயாக மாற முடிவு செய்தேன். நீண்ட தலைமுடி கொண்ட நாய்கள் மனித உருவத்துடன் ஒற்றுப் போகும். இதன் காரணமாகவே நான் கூலியாக மாறினேன்,” என அவர் தெரிவித்தார்.
தனியாக யூடியூப் சேனல் வைத்து இருக்கும் டோக்கோ, தனது பார்வையாளர்களிடம் அவர்கள் பார்க்க விரும்பும் வீடியோவை தெரிவிக்குமாறு கேட்கிறார். நாய் தோற்றம் தவிர இவரின் அசல் தோற்றம் எப்படி இருக்கும் என்பது மர்மமாகவே உள்ளது.
கொஞ்சம் News, கொஞ்சம் English
fulfill – நிறைவேற்று
bizarre – வினோதமான
breed – இனம்
sculptures – சிற்பங்கள்
peculiar – விசித்திரமான
quadrupedal – நான்கு பாதம்
Spoken English course starts at ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |