உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான உக்ரைனின் ஃபிளாக்மேன் விமானமான An-225 Mriya ஐ ரஷ்ய படைகள் அழித்துள்ளதாக உக்ரைனின் மாநில பாதுகாப்பு குழுமம் Ukroboronprom டெலிகிராமில் தெரிவித்துள்ளது. கீவ் நகருக்கு வெளியே ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் விமானம் அழிக்கப்பட்டதாக, Ukroboronprom ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது. விமானத்தின் மறுசீரமைப்புக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 21 ஆயிரம் கோடி) அதிகமாக செலவாகும் மற்றும் நீண்ட நாட்கள் எடுக்கும் என்று அக்குழுமம் கூறியது.
1980 களில் வடிவமைக்கப்பட்ட An-225 Mriya, இதுவரை கட்டப்பட்ட மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட விமானமாகும். இது 640 டன் சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. AN-225 ‘Mriya’ – உக்ரேனிய மொழியில் ‘கனவு’ என்று பொருள்படும் – உக்ரேனிய ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமான அன்டோனோவ் தயாரித்தது, மேலும் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக தகுதி பெற்றது, ரஷ்ய ஷெல் தாக்குதலால் கீவ்வுக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் அழிக்கப்பட்டது.
உக்ரைனில் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா அழிப்பு – ரஷ்யா தாக்குதல்
The biggest plane in the world "Mriya" (The Dream) was destroyed by Russian occupants on an airfield near Kyiv. We will rebuild the plane. We will fulfill our dream of a strong, free, and democratic Ukraine. pic.twitter.com/Gy6DN8E1VR
— Ukraine / Україна (@Ukraine) February 27, 2022

ரஷ்யா வியாழன் அன்று உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து பல உக்ரைன் நகரங்கள் மீது தாழ்வாக பறக்கும் சிறிய ரக ஏவுகணைகளை பொழிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் தெருச் சண்டை மூண்டது, இதன் போது உக்ரேனியப் படைகள் ரஷ்ய துருப்புக்களிடமிருந்து நகரத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடிந்தது.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459