கவனக்குறைவு சில நேரங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படித்தான் தங்க நகைகள் நிறைந்த பையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் பற்றி பார்ப்போம். மலேசியாவில் வசிக்கும் யாயா இஸ்மாயில் என்ற பெண் தனது கவனக்குறைவால் தங்க மோதிரங்கள், வளையல்கள் மற்றும் செயின்கள் நிறைந்த தனது பணப்பையை கிட்டத்தட்ட இழந்தார். யாயா தன் பணப்பையை தவறுதலாக குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் தன் தவறை உணர்ந்த நேரத்தில், அது ஏற்கனவே தாமதமாகிவிட்டது. காரணம் லாரி மூலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. கவலையடைந்த யாயா, குப்பையை கொட்டச்சென்ற தனது கணவரிடம் தெரிவித்தார். தாசெக் கெலுகோரில் உள்ள செபெராங் ப்ராய் நகர சபையின் (எம்பிஎஸ்பி) குப்பைக் கிடங்கில் உள்ள தொழிலாளர்களின் உதவியை பெற்ற பின்னரே, நகைகளுடன் கூடிய பணப்பையை கண்டுபிடிக்க முடிந்தது.
பெரும் குப்பைக் குவியலுக்கு மத்தியில் யாயாவின் பணப்பையைத் தேடுவது கடினமான பணியாக இருந்தது. குப்பை கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் யாயாவின் கணவரை தசெக் கெலுகோரின் உள்ள துப்புரவு துறைக்கு அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு குப்பைக் குவியலையும் கவனமாகத் தேட அவர்கள் அவருக்கு உதவினார்கள்.
கடைசியாக, பல போராட்டங்களுக்குப் பிறகு, பர்ஸ் கிடைத்தது. யாயாவின் கணவர் இந்த தகவலை தனது மனைவிக்கு வீடியோ கால் மூலம் தெரிவித்தார். யாயா இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் தனது முகநூல் பதிவின் மூலம் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அந்தப் பெண் சில புகைப்படங்களையும் பதிவுடன் இணைத்துள்ளார். குப்பை மேடுகளுக்கு நடுவே தொழிலாளிகளுடன் அவரின் கணவன் நிற்பதைக் காணலாம். தனது பணப்பையை கண்டுபிடிக்க உதவிய தொழிலாளர்களின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இது யாயாவின் வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாகும். ஒருவேளை அவர் நிறைய பண மதிப்புள்ள நகைகளை இழந்திருக்கலாம்.
இந்த தாராளமான உதவிக்காக, யாயா தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தையும் அவர்களுடைய கணக்கிற்க்கு மாற்றினார். யாயா அதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளார்.

MBSP இல் உள்ள தொழிலாளர்கள் ஆரஞ்சு நிற டி-ஷர்ட்களை அணிவார்கள் மற்றும் சமூகத்தில் ஹீரோக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் Wira Oren (ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஹீரோக்கள்) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
கொஞ்சம் News – கொஞ்சம் English
எளிமையாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
carelessness – கவனக்குறைவு
threw – எறிந்தனர்
dump yard – குப்பை கொட்டும் இடம்
strenuous – கடினமான
generous – தாராள
undisclosed – வெளிப்படுத்தப்படாத
dumpster – குப்பைத்தொட்டி
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459