சவூதி அரேபியாவில் பெண் ஒருவர், தனக்கு விவாகரத்து வழங்கவில்லை என்றால், நிர்வாணமாக வெளியே செல்வேன் என்று கணவனை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவளுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், நிர்வாணமாக சுற்றித் திரிவேன் என்று மனைவி மிரட்டியதால் வேறு வழியின்றி கணவன், மனைவியின் விவாகரத்துக்கு சம்மதத்தை அளித்தார் என்று Gulf News செய்தி வெளியிட்டுள்ளது.
விவாகரத்து தனது விருப்பத்திற்கு எதிரானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி அந்த நபர் ஷரியா நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும், விவாகரத்துக்கான ஷரியா காரணம் அவருக்கு உறுதிசெய்யப்பட்டதால், அவரது வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சவூதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்களில் ஒரு பெரிய அளவில் காணப்படுகிறது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏழு விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகள் வியக்கத்தக்க வகையில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஒருவர் தினமும் மனைவி குளிக்காததால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
தனது திருமணத்தை காப்பாற்றும் முயற்சியில், மனைவி பெண்கள் பாதுகாப்பு பிரிவில் புகார் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
பெண் குவார்சி கிராமத்தைச் சேர்ந்தவர், கணவன் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்தை தொடரவும், அவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் அந்த பெண் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும், கணவர் மீண்டும் மீண்டும் உறுதியாக அந்த பெண்ணுடன் உறவுகளை முடிக்க விரும்பினார். மனைவி தினமும் குளிக்காததால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற உதவுமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
அந்த நபர், தனது மனுவில், தனது மனைவியைக் குளிக்கச் சொன்ன பிறகு, தினமும் அவர்களுக்குள் சிறுசிறு சச்சரவு ஏற்படுவதாக பெண்கள் பாதுகாப்புப் பிரிவிடம் கூறியிருந்தார்.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு காரணம் என்ன?
கொஞ்சம் News – கொஞ்சம் English
ஜாலியாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
bizarre – வினோதமான
decline – மறு
lawsuit – வழக்கு
huge – மிகப்பெரிய
Statistics – புள்ளிவிவரங்கள்
astonishing – வியக்க வைக்கிற
repeatedly – மீண்டும் மீண்டும்
petition – மனு
spat – சிறு சச்சரவு
Spoken English course starts at ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |