10-Storey building in just over 28 hours | சீனாவின் சாங்ஷா நகரில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் 28 மணி 45 நிமிடங்களில் கட்டப்பட்டது. பிராட் குரூப் என்ற கட்டுமான நிறுவனம் ஜூன் 13 அன்று தனது யூடியூப் சேனலில் கிட்டத்தட்ட ஐந்து நிமிட நீள வீடியோவைப் பகிர்ந்தார்கள், அக்கட்டிடம் எவ்வாறு முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது அந்த வீடியோவில் தெரிகிறது.
பல அடுக்கு கட்டிடம் அல்லது ஒரு உயரமான கட்டிடத்தை கட்ட மிகக் குறைந்த நேரங்களில் நாங்கள் அடிக்கடி அமைத்திருக்கிறோம். இதற்கு விரிவான திட்டமிடல், போதுமான தொழிலாளர்கள் மற்றும் சாதகமான வானிலை இவை மூன்றும் தேவை. வழக்கமாக கட்டிடம் முழுமையா நிறைவு பெறுவதற்கு சில நாட்கள், சில வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் கூட ஆகும்.
10-Storey building in just over 28 hours
இருப்பினும், சீனாவின் சாங்ஷா நகரில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் 28 மணி 45 நிமிடங்களில் கட்டப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு கட்டிடத்தை நிர்மாணிப்பது என்பது தொழிளார்களின் முயற்சியிலா அல்லது தொழில்நுட்ப ரீதியாகவோ எவ்வாறு சாத்தியமாகும் என்று ஒருவர் கேள்வி கேட்கலாம். இதற்கு பதில் ஃபேப்ரிகேட் கட்டுமான முறைகளினால் இது கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். ஜூன் 16 அன்று நியூ அட்லஸின் அறிக்கையின் படி, முன்கூட்டியே தொழிற்சாலையில் ஃபேப்ரிகேட் செய்யப்படடு அவற்றை லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு தேவையான இடத்தில் மிக விரைவாக பில்டிங் பாக்ஸ் போல ஒன்றிணைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பிறகு தேவைக்கேற்ப கிரேன்களை பயன்படுத்தி தொகுதிகள் அவற்றை அடுக்கி வைக்கப்படுகின்றன.
பிறகு தொழிலாளர்கள் போல்ட்களைப் பயன்படுத்தி பாக்ஸ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறார்கள். மேலும் மின்சாரம் மற்றும் நீர் இணைப்பையும் கட்டிடத்திற்குள் நிறுவுகின்றனர். சாங்ஷாவில் 10 மாடி கட்டிடத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு குறைந்தது மூன்று கிரேன்கள் தேவை என்றும் நியூ அட்லஸ் அறிக்கை கூறுகிறது.
பிராட் குழுமம் இந்த கட்டிடம் பூகம்பத்தை எதிர்க்கும் திறன் உள்ளது என்றும் தேவைப்பட்டால் அதனை அப்படியே பிரித்தெடுத்து வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளாம் என்றும் கூறியுள்ளனர்.