நஹக் மோட்டார்ஸ் தனது இரண்டு மின்சார மிதிவண்டிகளான கருடா(Garuda) மற்றும் ஜிப்பிக்கு(Zippy) 1,510 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரை உள்ள நஹக் மோட்டார்ஸ் புதிதாக இரண்டு எலக்ட்ரிக் சைக்கிளான கருடா மற்றும் ஜிப்பியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்களின் விலை தற்போது முறையே ரூ .31,999 மற்றும் ரூ .33,499 ஆகும். இந்த இ-பைக்குகளுக்கான முதல் கட்ட முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 ஆம் தேதி முடிவடைந்தது. நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிருந்து மொத்தமாக 73 சதவிகித முன்பதிவுகள் வந்துள்ளதால் இந்த இரண்டு பிராந்தியங்களிலிருந்தும் மக்கள் அதிகபட்ச ஆர்வத்தை காட்டியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்நிறுவனம் தனது மேட்-இன்-இந்தியா எலக்ட்டிரிக் சைக்கிளை சர்வதேச நுகர்வோரிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூறுகிறது. காரணம் மொத்த முன்பதிவுகளில் 9 சதவீதம் ஜெர்மனி, ஒன்றினைந்த ஐரோப்பா, கனடா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வந்தவை.
கருடா மற்றும் ஜிப்பி ஆகிய இரண்டு இ-பைக்குகளும் நீக்கக்கூடிய பேட்டரி, எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் பெடல் சென்சார் தொழில்நுட்பம் போன்ற சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கின்றன. இந்த மின்சார மிதிவண்டிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் www.nahakmotors.eco வலைதளத்தில், உங்களுக்கு விருப்பமான மாதிரியைத் தேர்வுசெய்து, படிவத்தை நிரப்பி, ரூ .2,999 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகும், மேலும் இவை வீட்டில் உள்ள வழக்கமான பவர் சாக்கெட் மூலமாகவும் சார்ஜ் செய்யப்படலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 40 கிலோமீட்டர் வரை இந்த எலக்ட்ரிக் சைக்கிளை இயக்க முடியும், மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த எலக்ட்ரிக் சைக்கிள் சாலைகளில் ஓட்டுவதற்கு உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இந்த இரண்டு மாடல்களும் அலாய் ஸ்டீல் பிரேம்களுடன் வருகின்றன, மேலும் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிக்க 10 பைசா ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது.
10 நாட்களில் 1510 முன்பதிவுகளைப் பெற்ற இரண்டு எலெக்ட்ரிக் சைக்கிள் – Amazing response
நஹாக் குழுமத்தின் தலைவர் பிரவத் நஹக் பேசும் பொழுது, முதல் கட்டத்தில் பெறப்பட்ட முன்பதிவுகளை கொண்டு பார்ப்பதில் மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளுக்கு பெரும் தேவை உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது என்று கூறினார். முன்பதிவுகளில் சுமார் 9 சதவீதம் உலகளாவிய ஆர்டர்கள் என்றும், நிறுவனத்தின் எலக்ட்டிரிக் சைக்கிள்களை முதல் கட்டத்தில் இதுபோன்ற ஆர்டர்களை பெறுவது மிகவும் ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார். தற்பொழுது இந்திய நுகர்வோர்கள் ஈ.வி.க்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்கள் என்ற நம்பிக்கையை எங்கள் பிராண்டை பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டது ஆனால் தற்பொழுது ஜூலை 25 முதல் பிராண்ட் டெலிவரி தொடங்க திட்டமிட்டுள்ளதாக நஹாக் கூறினார். இந்நிறுவனம் மேலும் தயாரிப்புகளை தயார் செய்து கொண்டுள்ளது.
இந்நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பரி, வீட்டா மற்றும் பிரின்ஸ் ஆகிய மாடல்களை தயாரிக்கின்றன, அதுமட்டுமில்லாமல் 500 கிலோ எடையை லோடு ஏற்றக்கூடிய எலக்ட்ரிக் ஆட்டோ வையும் அறிமுகப்படுத்த உள்ளது. எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.
நம்முடைய மதுரைக்காரனின் அசத்தலான கண்டுபிடிப்பை படித்தீர்களா?
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|