ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு புதிய வரம்பற்ற 5ஜி டேட்டாவை (Airtel launches unlimited 5G data offer for everyone) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள அனைத்து திட்டங்களிலும் டேட்டா பயன்பாடு மீதான வரம்புகளை நீக்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எளிமையான வகையில், இப்போது 5G டேட்டா உபயோகத்திற்கு வரம்பு இல்லை, மேலும் இந்தச் சலுகை ரூ.239 மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கிடைக்கும். ஏர்டெல் 5ஜி பயனர்கள் இப்போது டேட்டா வரம்புகள் அல்லது தினசரி டேட்டா ஒதுக்கீடு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
———-“அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் என்பது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜியின் ஆற்றலை அனுபவிப்பதற்கான அறிமுகச் சலுகையாகும். தகுதியான திட்டங்களில் 5ஜி-இயக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது வரம்பற்ற 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. .

ஏர்டெல் 5ஜி பிளஸ் இப்போது சுமார் 270 இந்திய நகரங்களில் கிடைக்கிறது, இந்நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், இந்தியாவில் 365 நகரங்களில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் கூறுவதால், ரிலையன்ஸ் ஜியோவை விட இது மிகவும் பின்தங்கி உள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜியை வழங்குவதாக ஜியோ உறுதியளித்தது. மறுபுறம் ஏர்டெல், மார்ச் 2024க்குள் அனைத்து நகரங்களிலும் வெளியிடுவதாக அறிவித்தது.
———-ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அதன் “ஜியோ 5ஜி வெல்கம்” சலுகையின் ஒரு பகுதியாக வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரூ. 239 அல்லது அதற்கு மேல் மட்டுமே இது கிடைக்கும். சில வாரங்களுக்கு முன்பு, டெலிகாம் நிறுவனமும் ரூ.61 விலையில் ‘5ஜி அப்கிரேட்’ டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் “அன்லிமிடெட் 5ஜி டேட்டா” சலுகையைப் பெற, நிறுவனத்தின் Airtel Thanks செயலியைத் திறக்க வேண்டும். அதற்கான பேனர் பிரதான பக்கத்திலும் மற்ற பகுதிகளிலும் தெரியும். 5ஜி நெட்வொர்க் பகுதிகளில் மட்டுமே வரம்பற்ற 5ஜி டேட்டாவை ஒருவர் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, பேக்கின் செல்லுபடியாகும் வரை வரம்பற்ற 5G டேட்டா வேலை செய்யும். போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இது அவர்களின் அடுத்த பில் உருவாக்கம் வரை செல்லுபடியாகும்.
———-“எங்கள் வாடிக்கையாளர்களை பெஸ்ட்-இன்-கிளாஸ் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் மகிழ்விப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த அறிமுகச் சலுகை எங்கள் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட்டை பயன்படுத்தவும், ஸ்ட்ரீம் செய்யவும், அரட்டையடிக்கவும் மற்றும் பல நன்மைகளை அனல் வேகத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தினசரி டேட்டா லிமிட்டை பற்றி கவலைப்படவேண்டாம். எங்கள் வாடிக்கையாளர்கள் உலகத் தரம் வாய்ந்த ஏர்டெல் 5ஜி பிளஸின் ஆற்றலை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று பார்தி ஏர்டெல்லின் நுகர்வோர் வணிக இயக்குநர் ஷஷ்வத் சர்மா கூறினார்.
Spoken English course at 299 only. For more details WhatsApp: +918610924459