Signal la மாட்டினியா மாப்ள? என்று கேட்டால்… இல்ல மச்சான் ட்ராபிக் ஒன்னும் பெரிசா இல்ல… அதனால சீக்கிரம் வந்துட்டேன், என்று சொல்லி கேட்ட காலம் போய் இப்பொழுது இந்தியாவில் நீ Signal la இருக்கியா? என்றால் நீங்கள் நினைப்பது போல சாலையில் வாகனங்கள் போகும்போது காண்பிக்கப்படும் மஞ்சள் சிவப்பு பச்சை நிற ஒளிவிளக்குகள் நினைவுக்கு வருவதில்லை. அதற்கு மாறாக தற்பொழுது மொபைல் போன் பயனாளிகளுக்கு சிக்னல் என்றால் அது வாட்ஸ்ஆப்பை போன்ற Signal app ஒரு மெஸேஜ் ஆப் என்று உடனடியாக நினைவுக்கு வரும்.
Signal app தற்போது மிகவும் இந்தியாவில் பிரபலமாகி வளர்ந்துகொண்டிருக்கிறது காரணம் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் விடப்பட்ட கொள்கை முடிவில் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கிடையே ஷேர் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது. இதானல் பயனாளிகள் கண்டிப்பாக வாட்ஸ்ஆப் கொள்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது தொடர்ந்து வேலை செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வாட்ஸ்ஆப் கொள்கை முடிகள் மட்டுமில்லாமல் சிக்னல் என்ற வார்த்தையை இப்பொழுது வைரலாகி கொண்டிருக்க காரணம் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மாஸ்க் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் சிக்னல் மெஸஞ்ஞரை பயன்படுத்துங்கள் என்று அதனால் தற்பொழுது இந்தியாவில் பேசும் வார்த்தையாக மாறியுள்ளது.
Use Signal
— Elon Musk (@elonmusk) January 7, 2021
Signal app என்ற இந்த அப்ளிகேஷன் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது தான் குறிப்பாக இந்தியாவில் அது மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பை போலவே சிக்னலிலும் வாய்ஸ் கால், வீடியோ கால், டெக்ஸ்ட் மட்டுமில்லாமல் இது அணைத்து விதமான கோப்புகளையும் (files) அனுப்ப முடியும் என்று சொல்கிறார்கள். அதே போல செய்திகள் தானாகவே மறைகின்ற வசதியும் இதில் உள்ளது. இது மற்ற அப்ளிகேஷன்களை போலவே குரூப் மெஸேஜ் உள்ளது. இந்த சிக்னல் ஆப்பில் ஒவ்வொரு மெசேஜ்ம், அழைப்புகளும் என்கிரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதை யாராலும் மட்டுமில்லாமல் மெசஞ்சர் டெவலப்பர்களால் கூட படிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
Signal app-ல் எந்த விளம்பரங்களும் இல்லை, சந்தைப்படுத்துபவர்களும் இல்லை, ரகசிய கண்காணிப்பும் இல்லை என்று சொல்கிறாரகள். எனவே உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுடன் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறப்படுகிறது. உலகத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பேர் இந்த சிக்னல் ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.
இனி இந்தியாவின் மூலம் அந்நிறுவனத்திற்கு எப்பவுமே Green Signal தான்.