நான்கு சக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய வாகனத் துறையில் EV களுக்கு மாறுவது இரு சக்கர வாகனத் துறையில் ஒப்பீட்டளவில் விரைவானது. மின்சார வாகனங்களின் (EV) எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தாலும், இன்றும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் எரிபொருட்களால் இயக்கப்படுகின்றன. ஆனால் இது போல பழைய இருசக்கர வாகனங்களையும் மின்சார வாகனமாக மாற்றும் வசதி வந்துவிட்டது. இன்று, GoGoA1 என்ற நிறுவனத்தால் மின்சார வாகனமாக மாற்றப்பட்ட Hero Splendor ஐ நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம், என்று அந்நிறுவனம் வீடியோவில் விவரங்களையும் அளித்துள்ளது.
GoGoA1 இன் EV மாற்றும் கருவியின் விலை ரூ. 35,000, மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ. வரை பயனிக்கலாம் என்பது மட்டுமில்லாமல் மோட்டார் சைக்கிள்களுக்கு RTO-அங்கீகரிக்கப்பட்ட மின்சார மாற்று கருவிகளை வழங்குவதுடன், நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் 60 சதவீதம் அளவுக்கு அதன் தேவை அதிகரித்ததை அடுத்து, அதன் வணிகத்தை விரிவுபடுத்த விரும்புகிறது.
Hero Splendor Electric conversion kit
அந்த வீடியோவில், எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஆர்டிஓ-அங்கீகாரம் பெற்றிருப்பதால், விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தால், காப்பீட்டு நிறுவனமே சேதத்துக்குப் பணம் செலுத்தும் என்று நிபுனர் கூறுகிறார்.
கூடுதலாக, கன்ட்ரோலர் மற்றும் மோட்டார் ஆகியவை 3 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றன, மேலும் மோட்டார் சைக்கிள் கிட் பொருத்தப்பட்டவுடன் பச்சை நிறத்தில் ஆர்டிஓ வால் வழங்கப்பட்ட புதிய நம்பர் பிளேட்டைப் பெறும். GoGoA1 குழுவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தேவைகளை கடைபிடிக்கிறது.

இந்த கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், பழைய பெட்ரோல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றப்படும், ஸ்கிராப் ஆக வண்டியை போட வேண்டியதில்லை. GoGoA1 தற்போது மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் செயல்படுகிறது.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459