தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பந்தம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு மகளைப் பொறுத்தவரை, அவளுடைய தந்தை அவளுக்கு சிறந்த நண்பர், நம்பிக்கைக்குரியவர் மற்றும் பாதுகாவலர். ஆனால் சீனாவில் இருந்து வரும் ஒரு வீடியோ ஆன்லைனில் வேகமாக வைரலாகி வருகிறது அதில் மகள் தன்னுடைய தந்தைக்கு செய்யும் உதவியை் பார்த்த பிறகு நீங்கள் கண்ணீர் வடிக்கலாம்.
தற்போது வைரலான இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மக்கள் பகிர்ந்துள்ளனர். வீடியோவின் படி வாங் என்ற நபர் சமையலறையில் உணவு தயாரிக்கும் வேளையில் சிறிது நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறார். அதைக் கண்ட அவரது சிறிய மகள், தன் தந்தையை குளிரில் இருந்து இதமாக வைத்திருக்க, அவள் தன் மேலங்கியை எடுத்து மெதுவாக தந்தையின் மீது வைக்கிறாள்.
சிறிது நேரம் கழிந்து எழுந்த அந்த நபர் அவரது மகள் அவருக்காக என்ன செய்தாள் என்பதைக் கவனித்த பிறகு, வாங் கண்ணீரில் உடைந்துவிட்டார். “கொரோனா தொற்றுநோயின் போது உணவகத்தை நடத்துவதில் உள்ள சிரமத்தை நினைத்தி இருக்கும்பொழுது அவரது மகள் செய்தைக் கண்டு அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்” என்று கிளிப்பில் உள்ள உரை வாசிக்கப்பட்டது.
A daughter’s love – adorable video
“மிகவும் இனிமையானது” என்று பதிவின் தலைப்பு கூறுகிறது.
சிறுமியின் இந்த சைகையால் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தங்கள் அன்பைப் பொழிந்துள்ளனர்.
“ஒரு வலுவான குடும்பம் ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்கிறது,” என்று ஒரு பயனர் எழுதினார்.
மற்றொரு பயனர், “ஒரு மகள் நேசிக்கிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் News! கொஞ்சம் English!
confidante – நம்பிக்கைக்குரிய
swiftly – விரைவாக
asleep – உறக்கத்தில்
sweetly – இனிமையாக
gesture – சைகை
Follow us
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |