புகழ்பெற்ற யூடியூபர் பி பகாதி ஊக்கமளிக்கும் கதைகளுக்கு பெயர் பெற்றவர். தென்னாப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த யூடியூபரை ரகசிய சான்டா என்று பெயரிட்டுள்ளனர். புகழ்பெற்ற யூடியூபர் Bi Phakathi அவரது சேனலில் மற்வற்களுக்கு உதவி செய்வதையே வீடியோவாக பதிவிட்டு வருகிறார், ஆனால் பல வீடியோக்களில் அவரது குறைந்த பட்சம் ரூ.35000 முதல் சில நேரங்களில் அதிகபட்சமாக 2 லட்சம் வரை உதவிகளை வழங்குவார், அவரது வீடியோக்கள் உங்களை உணர்ச்சிவசப்பட வைப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைப் பாடங்களைக் கற்ப்பிப்பதாக இருக்கும். சமீபத்தில் யூடியூபரால் பகிரப்பட்ட அத்தகைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது, இது பொதுமக்களின் ஆர்வத்தை உருவாக்குகிறது.
வீடியோவில், பகாதி ஒரு சிறுவனுடன் பேசுகிறார், அச்சிறுவன் வாழ்க்கைக்காக தெருக்களை சுத்தமாக வைத்திருக்கிறார். ரூடி என்ற சிறுவன் தெருக்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட கேன்கள் மற்றும் குப்பைகளை எடுப்பதையும் மற்றும் கார்களை சுத்தம் செய்வதையும் வழக்கமாக செய்கிறேன் என்று கூறுகிறார். எதற்காக அப்படி செய்கிறார் என்று பேசுகையில், தனது பெற்றோர்கள் பிரிந்து விட்டதாகவும், தந்தையுடன் தான் வாழ்வதாகவும் கூறுகிறான்.
ரூடி தனது தந்தையின் வருமானம் போதவில்லை என்பதால், எனவே அவருக்கு உதவ ஏதாவது சம்பாதிக்க விரும்புவதாக கூறுகிறான். ஆனால் கோவிட் 19 தொற்றுநோயால் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர் தனது வாழ்வாதாரத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்றும் இதனால் தனக்காக உணவு மற்றும் தந்தைக்கு சிகரெட் வாங்க முடிகிறது என்றும் கூறுகிறான்.
Bi Phakathi YouTube video
யூடியூபர் தொடர்ந்து ரூடியுடன் உரையாடலைத் தொடரும்போது, சிறுவன் $50க்கும் (₹3815) குறைவாகவே சம்பாதிக்கிறான் என்பதை அறிந்து கொள்கிறார். ரூடியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, பகாதி திடீரென்று சிறுவனுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் கேன்கள் அடங்கிய ஒரு பையை பரிசளிக்கிறார். ரூடி மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பதாகத் தெரிகிறது, மேலும் அச்சிறுவன் பகாதிக்கு நன்றி சொல்லி முடிப்பதற்கு முன்பு அவர் மற்றொரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறார்.
பகாதி அவனிடம் 350 டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 26000) கொடுத்து எண்ணும்படி கேட்கிறார். அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, பகதி அவனிடம் இன்னொரு ரூபாய் நோட்டு கட்டுக்களை கொடுக்கிறார், அது ரூடியை அழ வைக்கிறது. பகாதியின் அன்பான செய்கைக்கு அவர் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார். அழும் ரூடிக்கு பகாதி ஆறுதல் கூறி, பணம் மற்றும் உணவுடன் வீட்டிற்குச் செல்லும்மாறு கூறுவதாக அந்த வீடியோ முடிகிறது.
எளிமையாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
கொஞ்சம் News – கொஞ்சம் English
Renowned – புகழ்மிக்க
estranged wife – பிரிந்த மனைவி
hence – எனவே
overwhelmed – நிரம்பி வழிந்த
repeatedly – மீண்டும் மீண்டும்
gesture – சைகை
console – ஆறுதல் அளி
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |