வாய் பிளக்க வைக்கும் டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் – இவ்வளவு தூரம் போகுமா? எவ்வளவு தூரம் என்பதை இக்கட்டுரையில் நாம் காண இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் வெளியூர் சென்றுவர வேண்டுமென்றால் பேருந்தை விட கார் பயணம் சிறந்ததாகும். காரணம் நேரம் விரயத்தை குறைக்கலாம். ஆனால் தற்பொழுது இருக்கும் எரிபொருள் விலை காரணமாக குறைந்தபட்சமாக ஒரு நூறு கிலோமீட்டர் காரில் சென்று திரும்ப வேண்டும் என்றாலே அதற்காகும் எரிபொருள் செலவை நினைக்கின்ற பொழுது வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் இருப்பதே சிறந்த தோன்றுகின்றது.
இதற்கு ஒரே மாற்று வழி மின்சார கார்கள் ஆகும் ஆனால் அதில் இருக்கும் குறைபாடு என்னவென்றால் அதனுடைய ரேஞ்ச் ஆகும். தற்போது நடைமுறையில் இருக்கும் கார்கள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 முதல் 300 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய தூரமாகும். நீண்ட தூர பயணங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய குறைபாடாகும் ஏனென்றால் பல இடங்களில் இன்னும் சார்ஜ் ஸ்டேஷன்கள் இல்லாமல் இருப்பதாகும்.
தற்பொழுது டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? என்று நினைத்தாலே வாடிக்கையாளர்கள் உற்சாகம் பரவசத்தில் அடைகிறார்கள். டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் பற்றிய தகவல் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை வியப்பில் ஆழ்த்துகிறது.
டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச்
பல நிறுவனங்கள் தங்களுடைய எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் படுத்த தயாராகி வருகிறது. இந்நிலையில் டாட்டா மோட்டார்ஸ் தன்னுடைய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் காரை விரைவில் விற்பனை செய்ய தயாராகி வருகிறது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான டாடா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச்
இந்த சூழலில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 500 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரில் ஜிப்ட்ரான் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்படும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் இதே பவர்ட்ரெயின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட, அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரில் கூடுதல் ரேஞ்ச் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் பேட்டரி தொகுப்பை டாடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய பேட்டரி தொகுப்பு 20 முதல் 40 சதவீதம் வரை அதிக ரேஞ்ச் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை விட பெரிய பேட்டரி தொகுப்பை அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சார்ஜ் ஏற்றும் நேரமும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் சார்ஜிங் ரேட்டை மேம்படுத்துவதற்காக சார்ஜிங் ஹார்டுவேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏதாவது மாற்றங்களை செய்யுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 127 பிஎச்பி எலெக்ட்ரிக் மோட்டார் உடன், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது ARAI சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். இதற்கிடையே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் சலுகைகள் கிடைக்கும் என்பதால், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை 500 கிலோமீட்டர் ரேஞ்சில் காரை அறிமுகப்படுத்தும் பொழுது, ஒரு நாளில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு உங்களால் நீண்ட தூரம் கூட பயணிக்க முடியும். அதிகபட்சமாக ஒருவர் ஒரு நாளைக்கு 500 கிலோ மீட்டர் காரை ஓட்டுவது என்பதே கடினமாக இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருமுறை சார்ஜ் செய்து 500 கிலோமீட்டர் பயணம் செய்துவிட்டு பிறகு இரவில் ஒய்வுவெடுக்கம் நேரத்தில் மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்குள் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் ஒன்னின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி படித்தீர்களா?
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|