Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

இது இருந்தா போலீஸ்காரங்க நடவடிக்கையில் இருந்து சுலபமாக தப்பிக்கலாம்! – 1 simple trick! Advantage

Amazon Owned 'Ring' Is Launching A Dash Cam

JP by JP
June 26, 2021
in Uncategorized
இது இருந்தா போலீஸ்காரங்க நடவடிக்கையில் இருந்து சுலபமாக தப்பிக்கலாம்!

[vc_row][vc_column][vc_column_text]

இது இருந்தா போலீஸ்காரங்க நடவடிக்கையில் இருந்து சுலபமாக தப்பிக்கலாம்!

எப்படி? என்று கேட்கிறீர்களா? இப்பொழுது இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

அமேசான் ஆட்டோமொபைல் துறையில் கனிசமான இடத்தை பெற முயற்சி செய்து வருகிறது. இது self-driving கார் ஸ்டார்ட்-ஆப் நிறுவனமான Zoox கையகப்படுத்தல் அல்லது Rivian என்ற பெயரில் அதன் பங்குகளை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுவாரஸ்யமான சில விஷயங்கள் என்றவென்றால் தனது சொந்த ஆட்டோமேஷன் மற்றும் IoT Ring பிராண்ட் ரிங்கிலிருந்து கார்களுக்கான டாஷ்கேமிரா தயாரிப்பில் இறங்கி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனம் விரைவில் கார்களுக்கான கேமிராவை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. கேமராவின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை டேப் டிரைவ் வெளியிட்டது. அமேசானின் virtual assistant ஆன அலெக்ஸாவால் இயங்கும் டாஷ்கேமிராவை தயாரிப்பில் அமேசான் ஈடுபடுகின்றதாக தெரிகிறது.





பிரபல ஆன்லைன் வர்த்தக அமேசான் வாகனங்களுக்கான கேமிரா உற்பத்தி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிறுவனம் கையகப்படுத்தியிருக்கும் நிறுவனங்களில் Ring-ம் ஒன்று. இது மின்சாதன தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

amazonஇந்த நிறுவனமே வாகன ஓட்டிகளுக்கு பயன்படக் கூடிய கேமிராவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேஷ் கேமிராவாகும். அதாவது, கார்களுக்குள் பொருத்தப்படக் கூடிய சிறிய ரக கேமிராவாகும். அக்கேமிரா காருக்கு உள்ளும், வெளியேவும் ரெக்கார்டு செய்யும் வசதிக் கொண்டது என்ற தகவலையும் அது கூறியிருந்தது. அமேசான் முதலில் பிளான் செய்ததை விட இந்த ரிங் கேமராவிற்கு உண்மையில் அதிகமான அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கேமராவை OBD-II போர்ட்டில் இணைக்க முடியும் என்றும், வீடியோக்களை உள்ளுக்குள்ளேயே(Internal memory) சேமித்து வைத்துக் கொள்ளும் இந்த கேமிராவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், தனியாக மெமரி கார்டு பொருத்த வேண்டும் என்ற அவசியம் இருக்காது என கூறப்படுகின்றது. அதேசமயம், கூடுதல் மெமரிக்காக மெமரி கார்டை சேர்க்கும் வசதி இதில் வழங்கப்படலாம்.இந்த கேமிராவில் சிறப்பு வசதியாக அமேசானின் விர்சுவல் அசிஸ்டண்ட் அலெக்ஸா தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அதனால் அலெக்ஸாவைப் போல் இந்த கேமிராவையும் குரல் கட்டளையின் வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, குரல் கட்டளை வாயிலாக காட்சிகளை பதிவு செய்வது மற்றும் தேவையில்லை என்றால் காட்சிளை ரெக்கார்டு செய்வதை ரத்து செய்வது ஆகியவற்றை உடனடியாக மேற்கொள்ள முடியும். அதேசமயம், இந்த கேமிராவை ரிங் செல்போன் செயலி வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என்றும் வைஃபை வாயிலாக இணைக்கும்பட்சத்தில் அனைத்து வீடியோக்களையும் செல்போன் வாயிலாக காண முடியும் என்றும் ரிங் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இனணயத்தில் ரெக்கார்டு செய்த வீடியோக்களைச் சேமிப்பதற்கும் செல்லுலார் இணைப்பு தேவைப்படும் என்றும் இதுமட்டுமின்றி வாகன திருட்டு மற்றும் பிற கசப்பான அனுபவத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள நிச்சயம் இந்த கேமிரா உதவியாக இருக்கும். தொடர்ந்து, விபத்து போன்ற அசம்பாவித நேரங்களில் ஓட்டுநர் சுயநினைவு இல்லாமல் இருக்கும்பட்சத்தில் தானாகவே அவசர அழைப்பை மேற்கொள்ளும் வசதி இந்த கேமிராவில் எதிர்பார்க்கப்படுகின்றது.





இதனை செப்டம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்தது. மேலும், 199 அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் பதினைந்து ஆயிரம்) அந்த கேமிரா விற்பனைக்கு வரும் என பல்வேறு தகவல்களை அப்போது அமேசான் வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே டேஷ் கேமிராவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமிராவை விண்ட் ஷீல்டில் பொருத்திக் கொள்ளும் வகையில் அமேசானின் ரிங் வடிவமைத்துள்ளது.

இந்த கேமிராவில் அமேசான் அலெக்சா மட்டுமின்றி இன்னும் சில தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இந்த கேமிராவை பொருத்துவதன் வாயிலாக தேவையற்ற நடவடிக்கைகளில் இருந்து நம்மை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதாவது, நாம் தவறே செய்யாமல் பெறக் கூடிய அபராத செல்லாண்களை மற்றும் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இந்த கேமிரா மிகுந்த உதவியாக இருக்கும்.




இத்தகைய சிறப்பு வாய்ந்த கேமிராவையே அமேசானின் ரிங் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. விரைவில் உலகம் முழுவதிலும் இதனை விற்பனைக்கு வழங்க நிறுவனம் தயாராகி வருகின்றது. அதன் ஆன்லைன் தளம் வாயிலாகவே இக்கேமிராவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Follow us

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: Amazondashcamringtech
Previous Post

Disguise of God! – Beware கடவுளின் வேஷம்! – சிறுகதை – 1 minute story

Next Post

Learn Malayalam through Tamil – 23 Basic sentences

JP

JP

Next Post
Learn Malayalam through Tamil

Learn Malayalam through Tamil - 23 Basic sentences

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye