Friday, March 27, 2026
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Life lesson

God comes to us – short story !

JP by JP
June 9, 2021
in Life lesson
God comes to us – short story !
0
SHARES
119
VIEWS

God comes to us ……..”இறைவன் நம்மை தேடி வருவார்…”

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்…”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்… அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது… உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்… இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது… எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா…?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்…”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை…
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்…
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு… இறைவனே உன்னை வந்து அடைவான்… சரிதானே…?”

“மிகவும் சரிதான் குருவே…”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா…”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்…

நம்
எண்ணங்களும்..
உணர்வுகளும்…
சிந்தனைகளும்…
சொல்களும்…
செயல்களும்…

நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு…

நல்லது செய்யுமெனில்…

இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை…

God comes to us.
இறைவனே நம்மை தேடி வருவார்…

அதனால தான் நான் எம்பாட்டுக்கு என் வேலையை செய்யரேன்.

Follow us

Facebook : https://www.facebook.com/lifeneeye
YouTube : https://www.youtube.com/channel/UChWLrf5BIQEQDYAS-ahHLCA
Twitter : https://twitter.com/lifeneeye
Instagram : https://www.instagram.com/life.neeye/

Tags: godLifeneeyeshort story
JP

JP

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
February 23, 2026
0
46
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
February 23, 2026
0
207
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

by admin
February 23, 2026
0
1.2k
இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியத்தை அமைக்கும் போது ஒரு ஃபார்முலா தேவைப்படுகிறது. அப்படி ஒரு இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!!...

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
0
71.6k

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic words in Malayalam with Tamil and English

50 Basic words in Malayalam with Tamil and English – Easy way

by admin
July 17, 2021
0
11.3k

50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0
2.9k

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0
6.4k

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2026. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2026. All rights reserved Lifeneeye