பல நேரங்களில் “நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது” என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது. சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப ஆங்கிலம் கற்பது என்பது மிகவும் எளிது. அந்த வகையில் இன்று நாம் ஒரு சூழ்நிலையை விவரித்து அதற்குண்டான வாக்கியமைப்பை நாம் கற்கும்பொழுது அவற்றை எளிமையாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.
நீங்கள், உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த உணவகத்தில் உங்களுக்கு பிடித்தமான பிரியாணியை நீங்கள் ஆர்டர் செய்துவிட்டீர்கள். உங்களுக்கான உணவு வந்த பிறகு நீங்கள் அதை சுவைத்து பார்க்கிறீர்கள். மிகவும் மோசமாக இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள். “நான் இந்த பிரியாணி ஆர்டர் செய்திருக்கக் கூடாது.” ஆனால் நீங்கள் ஆர்டர் செய்து விட்டீர்கள். இதுபோல கடந்த காலங்களில் நடந்த செயல்களுக்கு, நமக்காக அல்லது மற்றவர்களுக்கோ வருத்தம் (regret) தெரிவித்துக்கொள்ள அல்லது அறிவுரை (advice) வழங்குவதற்கு இந்த (should have/shouldn’t have + Verb 3rd from) வாக்கிய அமைப்பை பயன்படுத்தலாம்.
I shouldn’t have ordered this biryani.
நான் இந்த பிரியாணியை ஆர்டர் செய்திருக்கக் கூடாது.
மேலும் சில சூழ்நிலைகளை பார்ப்போம்.
நீங்கள் ஒருவரிடம் பணத்தை எண்ணாமலேயே ₹10,000 வாங்கிவிட்டீர்கள். பிறகு வீட்டில் வந்து எண்ணும் பொழுது ₹200 குறைவாக உள்ளது நீங்கள் இப்பொழுது அவரிடம் தொலைபேசியில், ₹200 குறைவாக உள்ளதை சொல்லும் பொழுது அவர் அதை மறுக்கிறார். கண்டிப்பாக “நான் ₹10,000 தான் கொடுத்தேன்” என்று அவர் சொல்கிறார். இப்பொழுது நீங்கள் என்ன நினைப்பீர்கள். நாம் பணத்தை வாங்கும்போது எண்ணி இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் எண்ணவில்லை அதாவது அந்த செயலை செய்யவில்லை. அதாவது அவர் கொடுத்த பணத்தை அப்படியே நீங்க வாங்கிக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
I should have counted when receiving the money.
பணத்தைப் பெறும்போது நான் எண்ணியிருக்க வேண்டும்.
இது போல பல சூழ்நிலைகளில் பல வாக்கியங்களை பேசுவோம். உதாரணமாக
- நீ அவனுடன் போய் இருக்க கூடாது
- நீ அந்த சந்தையில் அந்தப் பொருளை வாங்கி இருக்க கூடாது
- நான் பொருளை வாங்க அவனை அனுப்பியிருக்க கூடாது
- நான் முன்னாடியே உங்களிடத்தில் சொல்லயிருக்க வேண்டும்.
இப்பொழுது மேற்கண்ட வாக்கிய அமைப்பில் கூடுதலாக should பயன்படுத்தும் போது பயன்படுத்தும் பொழுது அந்த வாக்கியம் வருத்தம் அல்லது அறிவுரையாக வாக்கியமாக கருதப்படும். ஆனால் எல்லா சப்ஜெட்டிற்க்கும் ஒரே மாதிரியான ஃபார்முலா மட்டுமே. அதாவது
Subject + should have/shouldn’t have + Verb 3rd from +….
இந்த வாக்கியமைப்பை வைத்து மேலும் 50 உதாரணங்களைப் பார்ப்போம்.
50 Examples
- You shouldn’t have eaten all the biscuts.
நீங்கள் எல்லா பிஸ்கட்களையும் சாப்பிட்டிருக்கக் கூடாது. - She should have completed the assignment by now.
அவள் இப்போது வேலையை முடித்திருக்க வேண்டும். - They shouldn’t have parked in the handicap spot.
அவர்கள் ஊனமுற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கக்கூடாது. - He should have listened to his doctor’s advice.
மருத்துவரின் ஆலோசனையை அவர் கேட்டிருக்க வேண்டும். - You should have studied more for the exam.
நீங்கள் தேர்வுக்கு அதிகம் படித்திருக்க வேண்டும். - The company should have informed us about the changes earlier.
இந்த மாற்றங்கள் குறித்து நிறுவனம் எங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். - You shouldn’t have left the door unlocked.
நீ கதவைத் திறந்து விட்டு போயிருக்கக் கூடாது. - He shouldn’t have ignored the warning signs.
எச்சரிக்கை அறிகுறிகளை அவர் புறக்கணித்திருக்கக் கூடாது. - You should have saved some money for emergencies.
அவசரத் தேவைகளுக்காக நீங்கள் கொஞ்சம் பணத்தைச் சேமித்திருக்க வேண்டும். - The teacher should have explained the concept more clearly.
ஆசிரியர் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்.
- They shouldn’t have skipped breakfast.
அவர்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கக் கூடாது. - He should have fixed the leaky faucet.
கசிந்த குழாயை அவர் சரி செய்திருக்க வேண்டும். - She should have taken her umbrella; it’s raining now.
அவளுடைய குடையை அவள் எடுத்துகொண்டுபோய் இருக்க வேண்டும்; இப்போது மழை பெய்கிறது. - They should have apologized for their behavior.
தங்கள் நடத்தைக்கு அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். - He shouldn’t have driven after drinking.
அவர் குடித்துவிட்ட பிறகு வண்டி ஓட்டக் இருக்க கூடாது. - We should have double-checked the measurements before cutting.
நாம் வெட்டுவதற்கு முன் அளவீடுகளை இருமுறை சரிபார்த்திருக்க வேண்டும். - She should have called a professional to repair the roof.
அவள் கூரையை சரிசெய்ய ஒரு நிபுணரை அழைத்திருக்க வேண்டும். - You shouldn’t have lent him money; he never pays back.
நீங்கள் அவருக்குக் கடன் கொடுத்திருக்கக் கூடாது; அவர் திரும்ப செலுத்துவதில்லை. - They should have attended the meeting; it was important.
அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும்; அது முக்கியமானதாக இருந்தது. - He shouldn’t have lied about his qualifications.
அவர் தனது தகுதியைப் பற்றி பொய் சொல்லி இருக்ககூடாது.
- She shouldn’t have procrastinated on her project.
அவள் தனது திட்டத்தைத் தள்ளிப் போட்டிருக்கக் கூடாது. - They should have followed the instructions more carefully.
அவர்கள் அறிவுறுத்தல்களை இன்னும் கவனமாக பின்பற்ற இருக்கவேண்டும். - He shouldn’t have skipped his workout routine.
அவர் தனது வொர்க்அவுட்டைத் தவிர்த்திருக்கக் கூடாது. - We should have started saving for retirement earlier.
ஓய்வூதியத்திற்காக நாம் முன்பே சேமிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். - She should have backed up her files before the computer crashed.
கம்ப்யூட்டர் செயலிழக்கும் முன் அவள் கோப்புகளை காப்புப் பிரதி எடுத்திருக்க வேண்டும். - You shouldn’t have believed everything you heard.
நீங்கள் கேட்டதை எல்லாம் நம்பியிருக்கக் கூடாது. - He should have returned the borrowed books on time.
கடன் வாங்கிய புத்தகங்களை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். - They shouldn’t have spent so much money on unnecessary things.
தேவையில்லாத விஷயங்களுக்கு இவ்வளவு பணம் செலவழித்திருக்கக் கூடாது. - We should have respected their privacy.
அவர்களின் தனியுரிமையை நாம் மதித்திருக்க வேண்டும். - She should have attended her sister’s graduation ceremony.
தன் சகோதரியின் பட்டமளிப்பு விழாவில் அவள் கலந்துகொண்டிருக்க வேண்டும்.
- He should have notified the authorities about the suspicious activity.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து அவர் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். - They shouldn’t have underestimated the competition.
அவர்கள் போட்டியை குறைத்து மதிப்பிட்டிருக்ககூடாது. - You shouldn’t have ignored the warning signs of burnout.
தீக்காயத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் புறக்கணித்திருக்கக்கூடாது. - He should have acknowledged his mistake and apologized.
அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். - We should have thanked them for their help.
அவர்களின் உதவிக்கு நாம் நன்றி சொல்லிருக்க வேண்டும். - They should have reconsidered their decision before resigning.
ராஜினாமா செய்வதற்கு முன் அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். - He should have reported the incident to HR immediately.
இந்த சம்பவத்தை அவர் உடனடியாக HR-க்கு தெரிவித்திருக்க வேண்டும். - You shouldn’t have left the car unlocked in this neighborhood.
இந்தப் பகுதியில் நீங்கள் காரைத் திறந்து வைத்திருக்கக் கூடாது. - She should have paid attention to the expiration date on the food.
உணவின் காலாவதி தேதிக்கு அவள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். - They shouldn’t have ignored the traffic rules.
போக்குவரத்து விதிகளை அவர்கள் புறக்கணித்திருக்கக் கூடாது.
- We should have listened to the weather forecast before planning the picnic.
பிக்னிக் திட்டமிடும் முன் வானிலை முன்னறிவிப்பைக் கேட்டிருக்க வேண்டும். - I should have called you sooner.
நான் உன்னை சீக்கிரம் அழைத்திருக்க வேண்டும். - You should have spoken to me before deciding.
முடிவெடுக்கும் முன் நீ என்னிடம் பேசியிருக்க வேண்டும். - Sarah talked all the way through the movie. I should not have invited her to the cinema.
படம் முழுவதும் சாரா பேசினார். நான் அவளை சினிமாவுக்கு அழைத்திருக்கக் கூடாது. - I’m really tired today. I should not have stayed awake so late last night.
நான் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறேன். நேற்று இரவு இவ்வளவு தாமதமாக நான் விழித்திருக்கக் கூடாது. - I shouldn’t have shouted at her.
நான் அவளைிடம் கத்தியிருக்ககூடாது. - I’m sorry that I’m late for work. I should have woken up earlier.
நான் வேலைக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். நான் முன்பே எழுந்திருக்க வேண்டும். - She failed the exam. She should have studied harder.
அவள் தேர்வில் தோல்வியடைந்தாள். அவள் கடினமாகப் படித்திருக்க வேண்டும். - They ran out of gas on the highway. They should have checked their fuel gauge.
அவர்கள் நெடுஞ்சாலையில் எரிவாயு தீர்ந்து விட்டனர். அவர்கள் எரிபொருள் அளவை சரிபார்த்திருக்க வேண்டும். - I regret arguing with my friend. I should have kept my cool.
எனது நண்பருடன் வாக்குவாதம் செய்ததற்கு வருந்துகிறேன். நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் படித்த வாக்கியங்கள் அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போல உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியங்களை நீங்களே அமைத்து பேசி பழகுங்கள்.
இப்பொழுது உங்கள் நண்பர் உங்களிடம் கேட்காமல் உங்களுக்கும் சேர்த்து தோசையை ஆர்டர் செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தோசை வந்த பிறகு உங்களுக்கு சாப்பிட பிடிக்கவில்லை காரணம் நீங்கள் சப்பாத்தி ஆர்டர் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள் அது தெரியாமல் அவர் உங்களுக்கும் சேர்த்து தோசையை ஆர்டர் செய்துவிட்டார். ஆனால் உங்களுடைய முகத்தை பார்த்தே அவர் உங்களிடம் “நீங்கள் வேறு ஏதாவது ஆர்டர் செய்யலாம் என்று இருந்தீர்களா” என்று கேட்பார் இல்லையா? அப்பொழுது நீங்கள் “நான் சப்பாத்தி சாப்பிடலாம் ன்னு இருந்தேன்” என்று நீங்கள் சொல்வீர்கள் இல்லையா, அதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வீர்கள், யோசித்து வையுங்கள் அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
Follow us : Facebook | YouTube | Whatsapp | Twitter | Instagram | Google News