Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

பிறர் உதவி செய்யும் பொழுது அமைதியாக இருங்கள் – சிறுகதை | 1 minute Idiot story

JP by JP
November 26, 2021
in Life lesson
பிறர் உதவி செய்யும் பொழுது அமைதியாக இருங்கள்

ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்க தயாரானது. அப்போது ஒரு தேள் ஓடி வந்து, ” ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. அதனால் உன் முதுகில் ஒரு ஓரமாக இடம் கொடுத்தீன்னா, நான் பாட்டுக்கு அமைதியா அக்கரைக்கு போய் சேர்ந்துடுவேன் ” என்றது….

ஆமை தேளை பார்த்து பாவம்பட்டது. உன்னப் பாத்தா எனக்கும் பாவமா தான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன், இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக சொல்றேன், “வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு அவ்வளவு தான் வச்சுக்கோ” என்றது ஆமை.

சரி என்று சொல்விட்டு தேள் ஆமையின் முதுகில் ஏற்றிக் கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம், “பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு, இதுல நாம கொட்டினா ஆமைக்கு வலிக்குமா? வலிக்காதா என்ற சந்தேகம் வந்தது. சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள தேள், ஆமையின் முதுகில் லேசா ஒரு கொட்டு கொட்டியது.

பிறர் உதவி செய்யும் பொழுது அமைதியாக இருங்கள்

உடனே ஆமை கேட்டது…. “ஏய் என்ன பண்ற?”
“இல்லண்ணே… தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு, மன்னிச்சுடுங்க, என்றது தேள்.
ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது. மீண்டும் தேளுக்கு ஒரு எண்ணம், “லேசாகக் கொட்டியதால் தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால் என்ன என்று நினைத்து சற்று அழுத்தமாகவே அப்பொழுது கொட்டியது.

ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை. “என்னடா தம்பி, உன் புத்திய காட்டுறியா?” என்றது ஆமை.

“அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது. அதான் கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே” என்றது தேள்…

ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது.

கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம் தான். இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்து விட்டது.

“நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!
சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக் கூட மாட்டுறானே, என்று எண்ணியது.

இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம், என நினைத்து தன் முழு பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது.

ஆமைக்கு இப்போது கோபம் வந்தது. “நீ சரியா வரமாட்டே போலிருக்கே” என்றது. தேளுக்குக் கரையை நெருங்கி விட்ட தைரியம். அதனால் ஆமையிடம் “பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது. இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்” என்றது. ஆமை சிரித்தபடியே சொன்னது , “உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு. அது இதுதான்” என்று சொல்லிவிட்டு நீருக்குள் மூழ்கி சிறிது நேரம் கழித்து நீருக்கு மேல எழுந்தது. அவ்வளவு தான் முதுகின் மேள் இருந்த தேள் இப்பொழுது இல்லை.

தேள் இறந்து நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தது.

பிறர் உதவி செய்யும் பொழுது அமைதியாக இருங்கள்.

கடலோர குருவிகள் சிறுகதை – திரு. பாலகுமாரன்

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Previous Post

40 Basic words in Malayalam – Easy to learn

Next Post

100 English sentences for day to day usage – Easy English

JP

JP

Next Post
100 English sentences for day to day usage

100 English sentences for day to day usage - Easy English

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye