Idioms in English with Tamil meaning, Idioms – ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதற்கு தகுந்த நேரான பொருளை உணர்த்தாமல் மறைமுகமாக நமது முன்னோர்கள் வழி வழியாக பயன்படுத்தி வந்ததன் காரணமாக நாம் அதற்கு வேறு ஒரு அர்த்தத்தை காண்போம்.
உதாரணமாக மனசு ரொம்ப பாரமாக இருக்கிறது என்று நாம் சொல்கிறோம், இதில் நாம் மனசை எப்போதும் எடைபோட முடியாது. ஆனால் அதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் நாம் மிகுந்த கவலையில் இருக்கிறோம் என்று அர்த்தம் இதுதான் மரபுத்தொடர் அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்பர்.
இதுபோலவே நாம் தமிழில் பேசுவதுபோல ஆங்கிலத்திலும் இதுபோல சில வார்த்தைகளின் கலவை இருக்கிறது அதை தான் Idiom என்பார்கள்.
அது போல ஆங்கிலத்தில் இன்று 5 Idioms in English with Tamil meaning பார்க்கப் போகிறோம். அந்த ஆங்கில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டால் (it’s not real meaning) வேறு போல தோன்றும் ஆனால் அதை பயன்படுத்தும் போது ஆங்கிலேயர்கள் அதற்கு உண்டான அர்த்தத்தை வேறுவிதமாக காண்கிறார்கள் நாம் தமிழில் காண்பதுபோல்.

5 Idioms in English with Tamil meaning
1) You can say that again
நீங்கள் பேசியதற்கு ஒருவர் You can say that again என்று சொன்னால்.. அவர் உங்கள் கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம்.
நாம் ஒருவரை பற்றி கிண்டல் செய்யும் பொழுது…
“டேய் நீ ரொம்ப முட்டாள்டா”…… என்று உன் நண்பன் ஒருவனை பற்றி ஒருவர் சொல்லும் பொழுது…
அப்பொழுது நாம் சொல்லவது இல்லையா…
”இன்னொரு முறை சொல்லு”.. அது போல தான்…
Meaning:-
If someone says “You can say that again!”, it shows they strongly agree with what was just said.
Examples:
Mani : “Phew! It’s really hot today.”
Gopi: “You can say that again!”
Gomathi : “This horrible weather has been killing me.”
Sujitha: “You can say that again!”
2) White Lie
யாராவது வருத்தப்படுவதைத் தடுப்பதற்காகவோ சொல்லப்படும் பொய்.
அவர் சங்கடபடாமல் இருப்பதற்க்காக சொல்லப்படும் பொய்.
I said to my wife that her biryani was delicious, which was actually a white lie.
நான் என் மனைவியிடம் அவளது பிரியாணி சுவையாக இருந்தது என்று சொன்னேன், அது உண்மையில் ஒரு பொய்.
மனைவியிடம் நன்றாக இல்லை என்று சொன்னால் அவள் வருத்தப்படுவாள்,
அதை தடுப்பதற்க்காக சொல்லப்படும் பொய்.
3) Carte blanche – complete freedom to do something:
ஏதாவது செய்ய முழு சுதந்திரம் தருவது
The landlord has given her carte blanche to redecorate the living room.
வீட்டு உரிமையாளர் அவளுக்கு தனது அறையை மறுவடிவமைக்க முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார்.
He was given carte blanche to say what he liked in the report.
அறிக்கையில் தனக்கு பிடித்ததைச் சொல்ல அவருக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கப்பட்டது.
I am going to give you carte blanche to spend money
பணத்தை செலவழிக்க நான் உங்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுக்கப் போகிறேன்.
4) Skin and bones
நம்ம தமிழ்ல எலும்பும் தோலுமா இருக்கான் சொல்றது இல்லையா அதுதான்
Your brother is just skin and bones – has he been sick?
உங்கள் சகோதரர் வெறும் எலும்பும் தோலுமா இருக்கார் – அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா?
By the end of her life she was nothing but skin and bones
அவள் வாழ்க்கையின் முடிவில் அவளிடம் எலும்பு மற்றும் தோல்களைத் தவிர வேறில்லை
5) Dark horse
எண்ணங்களையும் விருப்பங்களையும் ரகசியமாக வைத்திருக்கும் ஒரு திறமையான மற்றும் ஆச்சர்யமான நபர், எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்;
புரியாத புதிர் என்று கூட சொல்லலாம் நாம் தமிழில்.
அதாவது அவங்களை பாக்குறதுக்கு பூனை மாதிரி அமைதியாக இருப்பாங்க ஆனால் திடிரென்று எதாவது பெரிசா சாதிப்பாங்க,,,அதாங்க அர்த்தம் உண்மையில் சொல்லப்போல்.
Sathish’s a bit of a dark horse. Do you think he’s got any chance of being elected?
சதீஷ் என்பவர் அப்படிபட்ட ஆள்.(dark horse என்பதை நேரடியாக தமிழில் விவரிக்முடியாது) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?
Aruna’s such a dark horse – I had no idea she’d published a novel.
அருணா என்பவர் அப்படிபட்ட ஆள். – அவர் ஒரு நாவலை வெளியிடுவார் என்று எனக்குத் தெரியவில்லை.
He is a dark horse, but I did find out that he once played football professionally.
அவர் என்பவர் அப்படிபட்ட ஆள்., ஆனால் அவர் ஒரு முறை தொழில் ரீதியாக கால்பந்து விளையாடியதை நான் கண்டுபிடித்தேன்.
He’s a bit of a dark horse: he was earning a fortune, but nobody knew.
அவர் என்பவர் அப்படிபட்ட ஆள் அவர் ஒரு செல்வத்தை சம்பாதித்து வந்தார், ஆனால் யாருக்கும் தெரியாது.
He was such a dark horse in the competition.
அவர் போட்டியில் அத்தகைய இருண்ட குதிரையாக இருந்தார்.
I didn’t know that James could paint. He’s such a dark horse.
ஜேம்ஸ் வரைவதற்கு முடியும் என்று எனக்குத் தெரியாது. அவர் அத்தகைய ஆள் என்று.
இது வரை நீங்கள் 5 Idioms in English with Tamil meaning படித்தீர்கள். மேலும் தொடர்ந்து எங்களை பின்பற்றுங்கள்.
எங்களுடைய அனைத்து பதிவுகளும் கீழ்க்கண்ட அனைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரும், தயவுசெய்து பின்பற்றுங்கள்.
Follow on:
Facebook: https://www.facebook.com/lifeneeye
Twitter: https://twitter.com/lifeneeye
Youtube: https://www.youtube.com/channel/UChWLrf5BIQEQDYAS-ahHLCA
Sharechat: https://b.sharechat.com/6uxTrk81NZ
Instagram: https://www.instagram.com/life.neeye/