ஒரு காலத்தில் கடிகாரங்கள் என்பது நேரத்தை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது பிறகு கடிகாரம் என்பது ஒரு வசதி படைத்தவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி தன்னுடைய கெளவரத்தை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இந்த நவீன ஸ்மார்ட் வாட்சிகள் உங்களைப் பற்றி முழுவதும் பகுத்தாய்வு செய்கூடியதாக இருக்கிறது. இக்கட்டுரையில் டைட்டனின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றப் பார்போம்.
உங்கள் ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் டிராக்கர், நீங்கள் எத்தனை அடிகள் நடந்துள்ளீர்கள், எவ்வளவு தூக்கம் தூங்குகிறீர்கள், காலை உடற்பயிற்சியின் போது உங்களின் உச்சக்கட்ட இதயத் துடிப்பு என்ன என்பதை போன்ற பலவற்றை அறிய உதவுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வாட்ச்மேக்கர், டைட்டன், பயனர்களுக்கு அதிக பயன்களை அளிக்க விரும்புகிறது; அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் ஆன டைட்டன் ஸ்மார்ட் மூலம் ஒரு வகையான உடற்பயிற்சி புரட்சியை கொண்டுவருவதாக உறுதியளிக்கிறது. மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மூன்று ஸ்டைலான வகைகளில் கிடைக்கும், Titan Smart ஆனது வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் சிறந்த பயனர் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.8,995 அறிமுக விலையில், இந்த ஸ்மார்ட் வாட்ச் முழு டச் இம்மர்சிவ் கிரிஸ்டல் டிஸ்ப்ளே, அலெக்சா பில்ட்-இன், 14 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் (நிலையான நிலைமைகளின் கீழ்), மல்டி-ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்கள் போன்ற அற்புதமான அம்சங்களை வழங்குகிறது.
டைட்டனின் புதிய ஸ்மார்ட்வாட்ச்
டைட்டனின் புதிய ஸ்மார்ட்வாட்சைப் பற்றி விரும்புவதற்கு நிறைய இருக்கிறது. Titan Smart ஆனது ஓனிக்ஸ் பிளாக், சார்கோல் ப்ளூ மற்றும் செஸ்ட்நட் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்களில் (ஸ்ட்ராப் கலர்) கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் Titan Smart World செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது நல்ல பயனர் அனுபவத்தை வழங்குகிறது மற்றும் Android பதிப்பு 6.0 மற்றும் iOS பதிப்பு 12.1 அதற்கு மேல் உள்ளவற்றுடன் செயல்படும்; . அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்க, ஸ்மார்ட் வாட்ச் ஆப் பயனர்களுக்கு உதவுகிறது.
டைட்டன் ஸ்மார்ட்டின் அருமையான திரை மற்றும் பலதரப்பட்ட ஹெல்த் அம்சங்களால் ஈர்க்கப்படுகிறது. இரத்தில் உள்ள ஆக்ஸிஜன் செறிவு (SpO2), VO2 மேக்ஸ், இதய துடிப்பு மானிட்டர் (HRM), பீரியட் டிராக்கர், ஸ்லீப் டிராக்கர் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டர்(மனஅழுத்தம்) போன்ற டிராக்கர்களுடன் இந்த கடிகாரம் வருகிறது. இவை தவிர, இந்த வாட்சில் நோட்டிபிக்கேஷன், அறிவிப்பு எச்சரிக்கைகள், இசை கட்டுப்பாடு, கேமரா கட்டுப்பாடு, வானிலை எச்சரிக்கை மற்றும் நீரேற்றம் எச்சரிக்கையுடன் வருகிறது.
மன அழுத்த கண்காணிப்பு உடனடியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அதேபோல், தூக்க கண்காணிப்பு மிகவும் துல்லியமாகவும் தகவல் தருவதாகவும் இருக்கிறது. இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவீடு போன்ற பிற அம்சங்கள் நன்றாக வேலை செய்கிறது.
ஒட்டுமொத்தமாக, நீங்கள் உறுதியான மற்றும் நீடித்த உடற்பயிற்சியை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்வாட்சைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த Titan Smart வாட்சில் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
மதிப்பிடப்பட்ட விலை: ரூ 8,995
கொஞ்சம் News – கொஞ்சம் English
ஜாலியாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
aspire – ஆசைப்படு
empower – அதிகாரம்
revolution – புரட்சி
overall – ஒட்டுமொத்த
wearable – அணியக்கூடிய
immersive – மூழ்கும்
strap – பட்டா
compatible – இணக்கமான
bowl – தரையில் உருட்டு
array – வரிசை
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |