Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

196 அடியில் உலகின் ஆழமான நீச்சல் குளம் துபாயில் – வீடியோ Amazing swimming pool

JP by JP
July 12, 2021
in Uncategorized
196 அடியில் உலகின் ஆழமான நீச்சல் குளம் துபாயில் - வீடியோ

196 அடியில் உலகின் ஆழமான நீச்சல் குளம் துபாயில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. சிப்பி போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த குளம் 60.02 மீட்டர் ஆழத்தில், 14 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டிருக்கிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 25 நிமிடங்கள் பயணம் செய்தால் நாட் அல் ஷெபாவில் என்ற இடத்தில் அமைந்துள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை கண்டு ரசிக்கலாம்.

இந்த நீச்சல் குளத்தை ஒரு நகரத்தையே தண்ணீருக்குள் மூழ்கியது போல வடிவமைத்திருக்கிறார்கள். இந்த “டீப் டைவ் துபாய் குளம்” வியக்க வைக்கும் அளவுக்கு அதனுள் ஏராளமான அற்புதங்களும் அதிசயங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது திறக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தில் முதன்முறையாக டைவ்ஸ் அடிப்பவர்களும், ஸ்கூபா டைவ்ஸ் (scuba dives), அத்துடன் டைவிங் சம்பந்தமான படிப்புகள் மற்றும் ஆரம்பம் முதல் தொழில்நுட்ப பயிற்றுநர்கள் வரை அனைத்து அளவிலான டைவிங் குறித்த பட்டறைகள்(workshops) உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை வழங்குகிறது.

196 அடியில் உலகின் ஆழமான நீச்சல் குளம் துபாயில் – வீடியோ

An entire world awaits you at Deep Dive Dubai the world’s deepest pool, with a depth of 60 meters (196 feet) #Dubai pic.twitter.com/GCQwxlW18N

— Hamdan bin Mohammed (@HamdanMohammed) July 7, 2021

அதுமட்டுமில்லாமல் நீருக்கடியில் 6 மற்றும் 21 மீட்டரில் நீர் உட்புகாத உலர்ந்த அறை கொண்ட இரண்டு வாழ்விடங்கள் உள்ளன.

நீருக்கடியில் சுமார் 56 அண்டர்வாட்டர் கேமராக்கள், மேம்பட்ட ஒலி மற்றும் விளக்குகளுடன் குளத்தின் அனைத்து கோணங்களையும் படம் பிடிக்கிறது.

குளத்தின் தண்ணீர் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் சிலிசஸ் எரிமலை பாறை வழியாக வடிகட்டப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்த குளத்தின் வடிவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாரம்பரியத்திற்கு ஒரு அஞ்சலி போல கருதுகிறார்கள், ஏனெனில் இது சிப்பி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த குளத்தில் ஒரு டைவ் கடை, பரிசுக் கடை(gift shop), 80 இருக்கைகள் கொண்ட உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இருந்து நீருக்கடியில் நடக்கும் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

டீப் டைவ் துபாயின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா பின் ஹப்தூர் கூறுகையில், இந்த குளம் நீருக்கு அடியில் ஒரு திரில்லிங்கான அனுபவத்தை ரசிக்கும் எண்ணம் கொண்ட டைவ்வர்களுக்கு இது மிகச் சிறந்த இடமாக அமையும் மற்றும் நீருக்கடியில் சாகசமும் ஆச்சரியமும் நிறைந்த ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டறியலாம் என்கிறார்.


Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Tags: dubaiworld's deepest 60-metre swimming pool
Previous Post

Simple One – First electric scooter from Simple Energy

Next Post

85 வயதில் பாட்டிக்கு டேட்டிங் செய்ய ஆசை – Magical Dating

JP

JP

Next Post
85 வயதில் பாட்டிக்கு டேட்டிங் செய்ய ஆசை

85 வயதில் பாட்டிக்கு டேட்டிங் செய்ய ஆசை - Magical Dating

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye