Saturday, March 28, 2026
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Life lesson

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் – சிறுகதை Work formula story

JP by JP
July 15, 2021
in Life lesson
வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் - சிறுகதை Work formula story
0
SHARES
446
VIEWS

‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்று தன்னுடைய கவலையை ஒரு அரசன் ஞானியிடம் தெரிவித்தான்.
அப்பொழுது ஞானி “உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா?” என்று கேட்டார்.

அதற்கு அரசனும்,
“என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.”
“கள்வர்கள் பயம் இல்லை.”
“மக்களுக்கு அதிக வரிகள் விதிப்பதில்லை.”
“அனைவருக்கும் சமமாக ஞாயமான நீதி செலுத்தப்படுகிறது.”
“நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.”
“ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.”
“இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான்.

அனைத்தையும் பொறுமையாக அரசனிடம் கேட்ட ஞானி, “அப்படியானால் ஒன்று செய், உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு” என்றார்.
சற்றும் யோசிக்காமல் அந்த அரசன், “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் ஞானியிடம்.
“நாட்டை என்னிடம் கொடுத்து விட்டு நீ என்ன செய்யப் போகிறாய்” என்றார் ஞானி.
“நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்” என்றான் அரசன்.
“எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட, என்னிடமே வேலைக்கு சேர்ந்து கொள், நான் சொல்கின்ற வேலையை நீ செய்” என்றார் ஞானி.
அதற்கு அரசனும் சம்மதித்தார். அப்பொழுது ஞானி, “உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது”, அதையே செய், ஆனால் என் பிரதிநிதியாக மட்டும், நாடு என்னுடையது என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்றார்.

அதை அரசனும் மகிழ்ச்சியோடு ஞானியின் கட்டளையை ஏற்றுக் கொண்டார். “நீ இப்பொழுது கிளம்பு, நாட்டை முன்புபோல நல்லபடியாக ஆட்சி செய், நான் பிறகு ஒரு நாள் வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்றார். “சரி” என்று சொல்லிவிட்டு மன்னனும் ஞானியிடம் விடைபெற்றார்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அந்த அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து ஞானியிடம் நீட்டினான். “அது இருக்கட்டும்”, “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று ஞானி அரசனிடம் கேட்டார்.

அதற்கு அரசன் “நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார். ஞானி மறுபடியும் “முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்கின்ற பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா…..? என்று கேட்டார். “இல்லை” என்றான் அரசன்.
“அப்போது மட்டும், ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்”, ஆனால் இப்போது மட்டும் உன்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது” என்று கேள்வி கேட்டார் அரசனிடம் ஞானி.
அதற்கு பதில் தெரியாமல் விழித்தான் அரசன். அப்பொழுது ஞானி சொன்னார்.

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் – சிறுகதை Work formula story

“அப்போது நீ, இந்த நாடு என்னுடையது” என்று எண்ணினாய். “இப்போது இது என்னுடையது அல்ல” என்று நினைக்கிறாய்.
“நான் இங்கு வேலை செய்யும் ஒரு பிரதிநிதி மட்டுமே” என்று எண்ணுகிறாய்.
“அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.
இதே மனநிலையுடன் இனிமேலும் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார்.

இப்பொழுது நம்முடைய வாழ்வில் வருவோம். நீங்கள் ஓரிடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய முதலாளி ஒரு நாள், இன்று இரவு பத்து மணி வரை வேலை செய்ய கட்டளையிடுகிறார் என்றால் அப்பொழுது நம்முடைய மனம் என்ன நினைக்கும், கொஞ்சம் நேரம் முதலாளியை திட்டி தீர்ப்போம் மனதிற்குள். இப்படி வேலை நேரத்தை விட கூடுதலாக நம்மை வேலை வாங்குகிறாரே என்ற எண்ணம் வரும். அதுவே அதே வேலையை நீங்கள் சுயமாக தொழில் தொடங்கி செய்து கொண்டிருக்கும் பொழுது இரவு பதினோரு மணி ஆனாலும் உங்களுக்கு இப்படி கூடுதலாக வேலை செய்கிறோமே என்ற எண்ணம் தோன்றாது, சரிதானே?

எனவே எங்கு வேலை செய்தாலும் அது நம்முடைய வேலை என்ற எண்ணம் வந்தால் எந்த வேலையிலும் உங்களுக்கு ஒரு பாரம் தெரியாது.

கடவுளின் திருவிளையாடல் – ஒரு காமெடி கதை divine fun story படித்தீர்களா?

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Tags: workwork style
JP

JP

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
February 23, 2026
0
46
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
February 23, 2026
0
208
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

by admin
February 23, 2026
0
1.2k
இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியத்தை அமைக்கும் போது ஒரு ஃபார்முலா தேவைப்படுகிறது. அப்படி ஒரு இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!!...

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
0
71.6k

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic words in Malayalam with Tamil and English

50 Basic words in Malayalam with Tamil and English – Easy way

by admin
July 17, 2021
0
11.3k

50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு...

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0
6.4k

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0
2.9k

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2026. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2026. All rights reserved Lifeneeye