Friday, March 27, 2026
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Uncategorized

காதலால் எவ்வளவு பெரிய இழப்புகள் – உண்மைச் சம்பவம் – Sadness story

JP by JP
July 20, 2021
in Uncategorized
காதலால் எவ்வளவு பெரிய இழப்புகள் - உண்மைச் சம்பவம் - Sadness story
0
SHARES
128
VIEWS

படிக்கின்ற வயதில் ஒரு பெண் செய்கின்ற சிறு தவறால் ஒட்டுமொத்த குடும்பம் அழியும் என்ற நிலைக்கு இந்த ஒரு சம்பவமும் எடுத்துக்காட்டாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெற்றோர் நிச்சயித்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இளம்பெண் காதலனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், இதனை அவமானமாக கருதி அப்பெண்ணின் தாய், தம்பி ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப வறுமை காரணமாக பெங்களூருவில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ஊத்தங்கரையை அடுத்த மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், இவரது மனைவி அம்சவேணி இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 19 வயதான மூத்த மகள் பிரியாவும் பக்கத்து வீட்டு இளைஞனான திருப்பதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவரும் தங்களுடைய காதலை விட்டுக்கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தன் மகளுக்கு உடனடியாக திருமணம் செய்தால்தான் நமக்கு கெளரவம் என்ற வழக்கமான முடிவை பெற்றோர் எடுத்து, அதற்குண்டான வேலையும் தொடங்கி மாப்பிள்ளையும் முடிவு செய்திருக்கிறார்கள். பிரியாவுக்கு வரன் பார்த்து, நிச்சயம் செய்து, பத்திரிக்கையும் அடித்து, ஊர் முழுவதும் விநியோகமும் செய்துள்ளனர் பெற்றோர். ஆனால் அந்த இளம்பெண் காதலைக் கைவிட முடியாத சூழ்நிலையில், காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருப்பதியும் பிரியாவும் திட்டமிட்டபடி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமணப் பத்திரிக்கை அடித்து ஊருக்கும் உறவினருக்கும் கொடுத்த பின் தன்னுடைய மகள் காதலனுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதை தாய் அம்சவேணி மிகப்பெரிய அவமானமாக கருதியுள்ளார்.

பெங்களூருவில் இருக்கும் கணவருக்கு மகளின் காதல் விஷயம் தற்கொலை வரை சென்றது தெரிந்தால் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று எண்ணிய அவர், மற்ற இரு பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொள்வது தான் சரியானது என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 13 வயது மகன் விஷ்ணு மற்றும் 15 வயதான இளைய மகள் திரிஷா ஆகியோரோடு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார் அம்சவேணி.

இதில் அம்சவேணி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, சிறுவன் விஷ்ணு சுற்றுப்பாறையில் தலைமோதி உயிர் இழந்திருக்கிறார். சிறுமி திரிஷா மட்டும் கிணற்றின் குறுக்கே சென்ற கம்பி ஒன்றில் சிக்கி இரவு முழுவதும் போராடியுள்ளார். அதிகாலை அவ்வழியாகச் சென்றவர்கள் த்ரிஷாவின் கூக்குரலைக் கேட்டு தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறுமி திரிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மகளின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பெங்களூருவில் சந்தோஷத்தில் இருந்த மகாலிங்கம், நடந்த சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டு நொறுங்கிப் போயிருக்கிறார். தன்னுடைய மகள்கள் மற்றும் மகனின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்காக ஓடி அயராது உழைத்துக் கொண்டிருந்த மகாலிங்கத்திற்கு அம்சவேனியின் தற்கொலை எண்ணம் மிகப்பெரிய இழப்பை தந்துள்ளது.

உரிய பக்குவமற்ற வயதில் வருவது காதல் அல்ல, எதிர்பாலின ஈர்ப்பு என்பதை இளம் பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வகையில் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் காதலை கைவிட வற்புறுத்துகின்ற பொழுது, அது நடக்காமல் போனால் உடனடியாக வேறொருடன் திருமணம் செய்து வைப்பது சரியான தீர்வாகாது.

காதலால் எவ்வளவு பெரிய இழப்புகள் – உண்மைச் சம்பவம் – Sadness story

ஒரு பக்குவமற்ற காதலால் எத்தனை பேருக்கு எவ்வளவு பெரிய இழப்புகள் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

1) அம்சவேணியின் உயிரிழப்பு.
2) விஷ்ணுவின் உயிரிழப்பு.
3) படித்துக்கொண்டிருந்த விஷ்ணு, தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து கற்பனை செய்து வைத்திருந்த அனைத்து எண்ணங்களும் பாழாய் போனது.
4) குடும்ப நலனுக்காகவே ஓடி உழைத்துக் கொண்டிருந்த மகாலிங்கத்திற்கு இது ஒரு பேரிடர் ஆகும்.
5) பிரியாவின் வாழ்க்கையும் மோசமாயிற்று
6) திருப்பதி குடும்பத்தில் உள்ளவர்க்கு ஏற்படும் பிரச்சனைகள்.
7) இனி தாய் இல்லாமல் தவிக்க போகும் திரிஷா.
8) மனைவியை இழந்து தவிக்கும் மகாலிங்கம்

அவர்களுக்குள் எத்தனை வருட காதல் என்பது தெரியாது ஆனால் அது கண்டிப்பாக ஒரு குறுகிய கால காதலாக மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு காதல் என்றால் எத்தனை பெரிய இழப்புகள். வாழ்க்கையில் எத்தனையோ பெரிய சந்தோஷங்கள் எல்லாம் இந்த உலகில் நிறைந்து கிடக்கின்றன. அதை எல்லாம் விட்டுவிட்டு முன்னேற வேண்டிய வயதில் முன்னேற முயற்சி செய்யாமல், சும்மா தானே இருக்கிறோம் காதலாவது செய்வோம் என்ற தவறான பாதையில் சென்றதால் இன்று பல உயிர்களை இழந்து இருக்கிறோம். இவையெல்லாவற்றுக்கும் மொபைலும் ஒரு காரணமாக அமையலாம்.

கௌரவம் என்பது எல்லாம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். சமூகம் தங்களை இனி எப்படிப் பார்க்கும் என்ற எண்ணத்தில் யாரும் தற்கொலை செய்துகொள்வதும் தீர்வாகாது. எந்த ஒரு விஷயத்தையும் எல்லோரிடத்திலும் கலந்து பேசி அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வது வாழ்க்கைக்கு உகந்ததாகும்.

எலியும் வைரமும் – சிறுகதை படித்தீர்களா?

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Tags: lovelove problemssuicide
JP

JP

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
February 23, 2026
0
46
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
February 23, 2026
0
207
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

by admin
February 23, 2026
0
1.2k
இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியத்தை அமைக்கும் போது ஒரு ஃபார்முலா தேவைப்படுகிறது. அப்படி ஒரு இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!!...

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
0
71.6k

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic words in Malayalam with Tamil and English

50 Basic words in Malayalam with Tamil and English – Easy way

by admin
July 17, 2021
0
11.3k

50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0
2.9k

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0
6.4k

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2026. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2026. All rights reserved Lifeneeye