எலியும் வைரமும் – சிறுகதை – Diamond rich story : ஒரு ஊரில் ஒரு பெரிய வைர வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் வீட்டில் எப்பொழுதும் எலித்தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு நாள் ஒரு எலி ஒன்று அந்த வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. அது மிகவும் விலை உயர்ந்த வைரம். அதைக் கண்ட வைர வியாபாரி அதை எப்படியாவது பிடித்து அதன் வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்கவேண்டும் என்று என்னி வேட்டையாடுபவரை அழைத்து வரச்சொன்னார் தன்னுடைய உதவி ஆட்களிடம்.
வேட்டையாடுபவன் நாட்டு துப்பாக்கியுடன் அந்த வைர வியாபாரி வீட்டிற்கு வந்தான். அந்த வைரம் விழுங்கிய எலியைப் பார்த்து நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடுபவன் சுட்டான். கொஞ்சம் குறி தவறியதில் எலி அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது இந்த துப்பாக்கி தசத்தத்தை கேட்டு உடனே நூற்றுக்கணக்கான எலிகள் ஒன்று கூடி விட்டது.
சிறிது நேரத்தில் அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. மீண்டும் சரியாக குறி பார்த்து, அந்த எலியை மட்டும் டுமீல்.. என சுட்டான். எலி இறந்து விட்டது.
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் வைர வியாபாரிக்கு ஒரு சந்தேகம் வந்தது, உடனே எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான்.
“ஆமா…! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?
அந்த எலி பிடிப்பவன் விளக்கம் சொன்னான்..
“இப்படித்தான்.. பலபேர் திடீர் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல் விலகி நிற்கிறார்கள். அதுவே அவர்களுக்கு ஆபத்தில் உதவாமல் போய்விடுகிறது”, என்றான்.
நண்பர்களும் உறவுகளும் அப்படித்தான். சிலர் இடையில் கிடைக்கும் செல்வத்தை நம்பி சில பணமில்லாத எழ்மையான ஆனால் உண்மையான நல்ல உறவுகளை ஒதுக்கி விடுகிறார்கள்.
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்க வேண்டும்.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|