Friday, March 27, 2026
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Life lesson

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் – அவர்களின் வயதைக் கேட்டால் அவ்வளவுதான்!

JP by JP
June 21, 2021
in Life lesson
கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் – அவர்களின் வயதைக் கேட்டால் அவ்வளவுதான்!
0
SHARES
158
VIEWS

வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையில், கணவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விடியற்காலையில் கொன்றான்.

கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த ரவி என்ற 21 வயது இளைஞன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புளியந்தோப்பு அருகில் கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 19) என்பவரை திருமணம் செய்தார்.




விஜயலட்சுமியும் ரவியும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் காரணம் ரவி குடும்ப செலவிற்காக எந்த ஒரு தொகையும் வீட்டில் கொடுப்பதில்லை. ரவி எப்பொழுதும் குடித்துக் கொண்டும் வீட்டில் சண்டை போடுவதுமாக இருந்துள்ளான். சில நாட்களுக்கு முன்பு தான் ரவியை பிரிந்து விஜயலட்சுமி தன்னுடைய பெற்றோர் வீட்டில் புளியந்தோப்பில் தங்கியிருக்கிறார். ரவி தன்னுடைய மாமனார் வீட்டில் சென்று சண்டையிட்டு அவளை என்னுடன் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதம் நடத்தி இருக்கிறான். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாமனாரையும் அடித்திருக்கிறான். இதனால் மனமுடைந்து விஜயலட்சுமி கணவருடன் செல்ல சம்மதித்திருக்கிறார். இவர்கள் இருவரும் விடியற்காலை 2 மணிக்கு வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழ் சண்டை போட்டுக் கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களின் விவாதம் அதிகமாகிவிட, பாதுகாப்புக்காக விஜயலட்சுமி ஓட முயற்சித்திருக்கிறார். இதனால் ரவி உடைந்த பாட்டிலை எடுத்து தன் மனைவியை குத்திவிட்டு ஓடிவிட்டான். விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றார்கள். காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

  • விஜயலட்சுமிக்கு தற்போது வயது 19. ஏற்கனவே அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்த 19 வயதுக்குள்ளாகவே இரண்டாவது குழந்தைக்கு தயாராவது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் .
  • பெண் பிள்ளைகள் காதல் வழியில் ஈடுபடுவார்களோ அல்லது வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துவிடுவார்களோ என்ற பயத்தினால் பல பெற்றோர்கள் தங்களின் கௌரவத்தை காப்பாற்ற படிக்கும் பெண்பிள்ளைகளை 18 வயது வந்தவுடன் அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணத்தை செய்து விடுகிறார்கள்.
  • ஒரு சில படிக்கும் பெண்பிள்ளைகள் செய்கின்ற தவறான காரணத்தினால் பல பெண் பிள்ளைகள் நன்றாக படிக்க முடியாமல் குறைந்த வயதில் குடும்ப சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
  • ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி வேண்டும் என்று அரசாங்கம் எவ்வளவு முறை விளம்பரப்படுத்தினாலும் அதைப்பற்றிய அறிவு இன்னும் ஒரு சில பெண்களுக்கு இல்லாமல் இருக்கிறது.
  • கணவரை பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல் கல்யாணம் ஆனவுடன் கர்ப்பம் தரிப்பது மிகப்பெரிய பலவீனம்.
  • 20 வயதிற்குள்ளாகவே ஒரு ஆண்மகன் தன்னுடைய பொருளாதாரத்தை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையில் முன்னேறாமல் திருமணத்திற்கு தயாராவது அறிவற்ற செயலின் உச்சகட்டம்.
  • பல ஆண்கள் 20 வயது தாண்டியவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நினைக்கிறார்கள். குடும்பம் என்பது ஒரு கலை, அதை நடத்துவதற்கும் அழகாக்குவதற்கும் அன்பும் பல அனுபவங்களும் தேவை. வெறும் உடலுறவு சுகத்திற்க்காக மட்டுமே குறைந்த வயதில் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த்திவிடலாம் என்று பல ஆண்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பதால் தான் பல பெண்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள்.
  • பெண்களை பற்றி நன்கு புரிதல் இல்லையென்றால் குடும்பம் என்பது ஒரு குழப்பமாகவே அமையும்.
  • ஒரு ஆணின் அறிவற்ற செயலால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவன்.



Tags: man stabs pregnant wife to death on roadmurder
JP

JP

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
February 23, 2026
0
46
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
February 23, 2026
0
207
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

by admin
February 23, 2026
0
1.2k
இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியத்தை அமைக்கும் போது ஒரு ஃபார்முலா தேவைப்படுகிறது. அப்படி ஒரு இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!!...

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
0
71.6k

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic words in Malayalam with Tamil and English

50 Basic words in Malayalam with Tamil and English – Easy way

by admin
July 17, 2021
0
11.3k

50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0
2.9k

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0
6.4k

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2026. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2026. All rights reserved Lifeneeye