வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையில், கணவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விடியற்காலையில் கொன்றான்.
கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த ரவி என்ற 21 வயது இளைஞன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புளியந்தோப்பு அருகில் கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 19) என்பவரை திருமணம் செய்தார்.
விஜயலட்சுமியும் ரவியும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் காரணம் ரவி குடும்ப செலவிற்காக எந்த ஒரு தொகையும் வீட்டில் கொடுப்பதில்லை. ரவி எப்பொழுதும் குடித்துக் கொண்டும் வீட்டில் சண்டை போடுவதுமாக இருந்துள்ளான். சில நாட்களுக்கு முன்பு தான் ரவியை பிரிந்து விஜயலட்சுமி தன்னுடைய பெற்றோர் வீட்டில் புளியந்தோப்பில் தங்கியிருக்கிறார். ரவி தன்னுடைய மாமனார் வீட்டில் சென்று சண்டையிட்டு அவளை என்னுடன் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதம் நடத்தி இருக்கிறான். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாமனாரையும் அடித்திருக்கிறான். இதனால் மனமுடைந்து விஜயலட்சுமி கணவருடன் செல்ல சம்மதித்திருக்கிறார். இவர்கள் இருவரும் விடியற்காலை 2 மணிக்கு வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழ் சண்டை போட்டுக் கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களின் விவாதம் அதிகமாகிவிட, பாதுகாப்புக்காக விஜயலட்சுமி ஓட முயற்சித்திருக்கிறார். இதனால் ரவி உடைந்த பாட்டிலை எடுத்து தன் மனைவியை குத்திவிட்டு ஓடிவிட்டான். விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றார்கள். காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
- விஜயலட்சுமிக்கு தற்போது வயது 19. ஏற்கனவே அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்த 19 வயதுக்குள்ளாகவே இரண்டாவது குழந்தைக்கு தயாராவது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் .
- பெண் பிள்ளைகள் காதல் வழியில் ஈடுபடுவார்களோ அல்லது வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துவிடுவார்களோ என்ற பயத்தினால் பல பெற்றோர்கள் தங்களின் கௌரவத்தை காப்பாற்ற படிக்கும் பெண்பிள்ளைகளை 18 வயது வந்தவுடன் அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணத்தை செய்து விடுகிறார்கள்.
- ஒரு சில படிக்கும் பெண்பிள்ளைகள் செய்கின்ற தவறான காரணத்தினால் பல பெண் பிள்ளைகள் நன்றாக படிக்க முடியாமல் குறைந்த வயதில் குடும்ப சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
- ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி வேண்டும் என்று அரசாங்கம் எவ்வளவு முறை விளம்பரப்படுத்தினாலும் அதைப்பற்றிய அறிவு இன்னும் ஒரு சில பெண்களுக்கு இல்லாமல் இருக்கிறது.
- கணவரை பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல் கல்யாணம் ஆனவுடன் கர்ப்பம் தரிப்பது மிகப்பெரிய பலவீனம்.
- 20 வயதிற்குள்ளாகவே ஒரு ஆண்மகன் தன்னுடைய பொருளாதாரத்தை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையில் முன்னேறாமல் திருமணத்திற்கு தயாராவது அறிவற்ற செயலின் உச்சகட்டம்.
- பல ஆண்கள் 20 வயது தாண்டியவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நினைக்கிறார்கள். குடும்பம் என்பது ஒரு கலை, அதை நடத்துவதற்கும் அழகாக்குவதற்கும் அன்பும் பல அனுபவங்களும் தேவை. வெறும் உடலுறவு சுகத்திற்க்காக மட்டுமே குறைந்த வயதில் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த்திவிடலாம் என்று பல ஆண்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பதால் தான் பல பெண்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள்.
- பெண்களை பற்றி நன்கு புரிதல் இல்லையென்றால் குடும்பம் என்பது ஒரு குழப்பமாகவே அமையும்.
- ஒரு ஆணின் அறிவற்ற செயலால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவன்.