14 கி.மீ. அங்கப்பிரதட்சணம் செய்யும் பெண் – காரணம் கேட்டால் ஆடிப்போய்வீர்கள்
பக்தியை காண்பிக்க அளவே இல்லை. ஒவ்வொரு பக்தனுக்கும் ஒவ்வொரு மாதிரியான வேண்டுதல்கள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், மொட்டை போடுதல், நடைபயணம் இப்படி பலவிதமான வேண்டுதல்கள் அவருடைய தன்மைக்கு ஏற்றவாறு இருக்கிறது.
14 கி.மீ. அங்கப்பிரதட்சணம் செய்யும் பெண்
திருவண்ணாமலை : ஆந்திராவை சேர்ந்த அருணாசல மாதவி, 48, என்ற பெண், பெண் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட திருவண்ணாமலை கிரிவல பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலம் பெற்று வாழ, ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்த சேர்ந்த அருணாசல மாதவி, 48 என்ற பெண் கிரிவலப் பாதையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அங்கப் பிரதட்சணத்தை தொடங்கினார். ‘ஓம் அருணாசலாய நமஹ’ என்ற மந்திரத்தை கூறி, தினமும் அதிகாலை 5:00 முதல் 10:00 மணி வரை அங்கப்பிரதட்சணம் செய்கிறார். மொத்த கிரிவலப் பாதையானது 14 கி.மீ. ஆகும், எனவே அத்தூரத்தை முழுவதும் அங்கப்பிரதட்சணம் முடிக்க எப்படியும் அவருக்கு ஐந்து நாட்களாகும் என்கிறார்கள்.
கடந்த, 15 ஆண்டுகளாக அண்ணாமலையாரின் பக்தையாக உள்ள இவர், ஏற்கனவே மூன்று முறை, உலக மக்கள் நன்மைக்காக, அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |