தற்பொழுது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினந்தோறும் ஏறிக்கொண்டே இருக்கின்ற சூழ்நிலைகளில் வாகன ஓட்டிகள் அதற்காகவே தினந்தோறும் ஒரு பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தினமும் அலுவலகங்களுக்கு சென்று வர ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டும்போது, மாதம்தோறும் அவர்களுக்கு குறைந்தது 3,000 ரூபாயாவது செலவாகிறது.
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ்குமார் ஒரு தனித்துவமான சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரத்தை சைக்கிளை வடிவமைத்து இருக்கிறார். இதனால் பயணிகளுக்கு 50 கி.மீ தூரம் செல்ல வெறும் ரூ .1.50 ஆகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான மதுரை பகுதியைச் சேர்ந்த தனுஷ், இந்த வடிவமைப்பு தன்னுடையது என்றும், மதுரை போன்ற நகரங்களுக்கு இது பொருத்தமானது என்றும், இது அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என்றும் கூறினார். சோலார் பேனல்களின் உதவியுடன் சைக்கிளை தொடர்ந்து 50 கி.மீ வரை இயக்க முடியும். பேட்டரியில் மின்சாரம் கீழ்நிலைக்குக் குறைக்கப்பட்ட பின்னரும் ஒரு பயணி 20 கி.மீ.க்கு மேல் பயணிக்க முடியும்.
மதுரைக்காரனின் அசத்தலான கண்டுபிடிப்பு – 50 கி.மீ. வெறும் ரூ 1.50 மட்டுமே
Tamil Nadu | Madurai college student, Dhanush Kumar designs solar-powered electric cycle
— ANI (@ANI) July 10, 2021
The bicycle can run for up to 50 km continuously with the help of solar panels. A rider can travel more than a 20kms after the electric charges reduce to the downline pic.twitter.com/fNynBFC3z8
மின்சார சைக்கிளின் வேலை குறித்து கேட்டபோது, கல்லூரி மாணவர் தனுஷ்குமார், “இந்த பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் விலை பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. இந்த சைக்கிளில் 50 கி.மீ வரை பயணிக்க ரூ .1.50 செலவாகிறது. இந்த சைக்கிளை 30-40 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரத்திற்குள் இந்த எலக்டிரிக் சைக்கிளை ஓட்ட இந்த வேகம் போதுமானது” என்கிறார்.
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் போது, மக்கள் பயணிக்க இந்த எலக்ட்ரிக் சைக்கிள் ஒரு சிறந்த மாற்றாக கருதலாம்.
News source : ANI
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|