வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதியை பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.
இன்றைய நவீன உலகில் புதிதாக ஒருவர் மொபைல் வாங்கினாலே அதில் முதலில் நாம் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்வது ஆகும். தற்போது வாட்ஸ் அப்பில் பல வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கிக் கொண்டே வருகிறார்கள், குறுஞ்செய்தி அனுப்பி அதுமட்டுமில்லாமல் பணம் அனுப்புவதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது, அதாவது இது பயனர்களை இனிமேல் படங்களை சுருக்காமல் (without compression) அனுப்பும் வசதி பெற இருக்கிறார்கள்.
WABetaInfo என்ற பிரபலமான வலைத்தளமானது வாட்ஸ்அப்பைச் சுற்றி நடக்கக்கூடிய வழக்கமான அப்டேட்டுகளை வழங்கிவருகிறது. இந்த அம்சம் குறித்து தற்போது அதில் வெளியிடப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதி
WABetaInfo அறிக்கையின் படி இந்த அம்சம் முதலில் பீட்டா சோதனை பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறது. வழக்கமாக வாட்ஸப்பில் நாம் ஒருவருக்கு ஒரு படத்தை அனுப்பும் பொழுது அது தானாகவே கோப்புகளின் அளவை(file size) கம்பிரஷன் செய்து மற்றவர்களுக்கு அனுப்பும். இதனால் கோப்புகளின் தரம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இனிமேல் வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதியால் வாட்ஸ் அப்பில் நாம் ஒருவருக்கு வீடியோவை அனுப்பும் பொழுது அதில் நீங்கள் வீடியோ காண செட்டிங்கில் குவாலிட்டியை செலக்ட் செய்து தரம் குறையாமல் மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியை நமக்கு வழங்கியிருக்கிறது அதேபோல ஒரு படத்தையும் கம்பிரஷன் செய்யாமல் தரமாக அடுத்தவர்களுக்கும் அனுப்ப முடியும் என்கிறது
வாட்ஸ்அப்பில் இதுபோன்ற எந்த அம்சமும் தற்போது கிடைக்கவில்லை, மேலும் அது தானாகவே படத்தையும் வீடியோ தரத்தையும் அதன் வரம்புக்கு ஏற்ப சுருக்கிக் கொள்கிறது, இது பெரும்பாலான நேரங்களில் படம் அல்லது வீடியோ தரத்தையும் குறைக்கிறது.
வீடியோ தரத்தை நிர்வகிப்பதற்கான அதே அமைப்புகளை(settings) வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் என்று Mashable India தெரிவித்துள்ளது. “குறிப்பிட்ட படங்களுக்கான சிறந்த சுருக்க வழிமுறையை தானாகவே கண்டறியும் என்றும், அதனைக்கொண்டு சிறந்த தரத்தைப் பயன்படுத்தி படத்தை அனுப்பும்.
இது தவிர, வாட்ஸ்அப் அதன் iOS பயனர்களுக்காக ஒரு பெரிய இணைப்பு முன்னோட்டத்திலும் (large link preview) செயல்படுகிறது, இணைப்புகள் எவை என்பதைப் பார்ப்பதை எளிதாக்குகிறது. பெரிய மாதிரிக்காட்சி இணைப்பு அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும்.
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|