Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

60 வருட போராட்டத்திற்குப் பின் விவசாயிக்கு கிடைத்த வெற்றி – a struggle farmer

JP by JP
July 21, 2021
in Uncategorized
60 வருட போராட்டத்திற்குப் பின் விவசாயிக்கு கிடைத்த வெற்றி

© Provided by News18 A Farmer Got his Back Land After 60 Years. It’s Now Worth Crores

60 வருட போராட்டத்திற்குப் பின் விவசாயிக்கு கிடைத்த வெற்றி : மத்தியப் பிரதேசத்தின் ரத்லத்திலம் ஊரில் உள்ள ஒரு ஏழை பழங்குடியான தவார் என்பவர் 60 வருட போராட்டத்திற்கு பின்பு பல கோடி மதிப்புள்ள தனது நிலத்தைை திரும்பப் பெற்றார். இச்சம்வம் 1961 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு ஏழை கல்வியறிவற்ற பழங்குடி விவசாயி தவாரை அவரது 16 பெரிய பண்ணை நிலங்களிலிருந்து சிலர் குறைவான விலையை கொடுத்து மோசடி செய்தபோது இப்போராட்டம் தொடங்கியது. பின்னர், அவரது மகன்களான தவார், மங்களா, நானுராம் ஆகியோர் நிலத்தை திரும்பப் பெற முயன்றாலும் பயனில்லை. ரத்லத்திலம் பகுதியின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் 1987 இல் வழங்கிய தீர்ப்பில், 1961 ஆம் ஆண்டின் விற்பனை பத்திரம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகும், மூன்று சகோதரர்களின் பெயர்கள் நில ஆவணங்களிலோ அல்லது தீர்ப்பிலோ பதிவு செய்யப்படவில்லை.

அப்போதிருந்து, 34 ஆண்டுகளாக, சகோதரர்கள் நீதி கோரி பல்வேறு நீதிமன்றங்களில் போராடி வருகின்றனர். பின்னர் பல வழக்குகள் மற்றும் விசாரணைகள், இந்த நீதிமன்றங்கள் பல தங்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கின. இருப்பினும், நிலத்தை ஒப்படைப்பதற்கான தேதி குறிப்பிடப்படாமலே இருந்தது. இறுதியாக அனைத்தும் தோல்வியுற்றபோது, ​​விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் திரும்பப் பெறுமாறு கோரினர்.

முழு கதையையும் கேட்டதும், கலெக்டர் குமார் புருஷோத்தம் திகைத்துப் போனார், உடனடியாக அவர் எஸ்.டி.எம்-ஐ சகோதரர்களின் பெயரில் பதிவு செய்து நிலத்தை ஒரு வாரத்திற்குள் பழங்குடி மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இறுதியாக, ஜூலை 8 ஆம் தேதி, ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதோடு, நிலத்தின் மதிப்பு பல கோடியில் இருப்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர்.

இந்த சம்பவம் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்துள்ளார்.

60 வருட போராட்டத்திற்குப் பின் விவசாயிக்கு கிடைத்த வெற்றி

जनजाति भाई थावरा जी, मंगला जी तथा नानूराम जी को अपनी भूमि वापस प्राप्त होने की बहुत – बहुत बधाई!

रतलाम कलेक्टर श्री पुरुषोत्तम जी का यह कार्य अभिनंदनीय है। जनता की सेवा ही सुशासन है। https://t.co/yUGcNQ1iWm

— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 9, 2021

இதனை உடனடியாக செயலாக்கம் செய்த கலெக்டரை வெகுவாக எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி கூலித் தொழிலாளர்களாக இருந்த விவசாய குடும்பங்கள், இச்சம்பவத்தால் அவர்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வர இருக்கின்றன. எங்கள் நிலத்தை திரும்பப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், என்று அவர்கள் கூறினர்.

இந்த உண்மை சம்பவத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்வது என்ன? வாழ்க்கையில் சில நேரங்களில் போராட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. அந்த விவசாயி 60 வருடத்திற்கு பிறகு தான் அவருக்கு இன்று பலன் கிடைத்திருக்கிறது. ஒருவேளை தன் முயற்சியை அவர் கைவிட்டு இருந்தார் இன்று அந்த பலனை அனுபவிக்க முடியாது. அதுபோல உங்கள் வாழ்வில் எக்காரணத்தைக் கொண்டும் முயற்சியை கைவிடாதீர்கள்.

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Previous Post

வாசனை பிடித்தாலே உயிர் போகும் உலகின் மிக மோசமான விஷ தோட்டம் – Poison Garden

Next Post

8 எட்டு வழி சாலை – 594 கி.மீ இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான சாலை – Ganga Expressway – Master plan

JP

JP

Next Post
8 எட்டு வழி சாலை - 594 கி.மீ இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான சாலை - Ganga Expressway - Master plan

8 எட்டு வழி சாலை - 594 கி.மீ இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான சாலை - Ganga Expressway - Master plan

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye