கைகூப்பி கெஞ்சி அழும் குழந்தையின் கோரிக்கை என்ன தெரியுமா? -வைரல் வீடியோ
ஒரு சிறு குழந்தை கோழியின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. தெற்கு சிக்கிமின் மெல்லியைச் சேர்ந்த சிறுவன், தான் வளர்த்த கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தன் மூத்தவர்களிடம் அழுது கெஞ்சுவதைக் காணலாம். கோழி அனைத்தையும் ஒரு சிறிய வேனில் ஏற்றி இறைச்சி கூடத்தை நோக்கிச் செல்வதைக் காணும் பொழுது குழந்தையின் மனம் உடைகிறான்.
5 நிமிடங்கள் 21 விநாடிகள் நீளமான வீடியோவில், அந்தச் சிறுவன் தனது கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இடைவிடாமல் வருத்தப்படுவதையும், சுற்றியுள்ள மக்களிடம் அழுதுகொண்டே வேண்டுகோள்களைக் வைப்பதையும் காணலாம். அவன் கண்களில் கண்ணீருடன் கைகூப்பிக்கொண்டு அனைவரையும் கெஞ்சி கேட்கிறான்,
ஒரு கட்டத்தில் யாரும் செவிசாய்க்காதபோது, அவர் அழுதுகொண்டே தெருக்களில் அமர்ந்திருக்கிறான். அந்த வீடியோ தி வாய்ஸ் ஆஃப் சிக்கிமின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இதுவரை வீடியோவை பார்த்து இருக்கின்றனர் மற்றும் 895 பேர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் பெற்றுள்ளது.
அக்குழந்தையின் இரக்கம் எல்லா தரப்பட்ட மக்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. “அச்சிறுவன் உண்மையில் மோசமாக உணர்கிறான். அவனது வலியை எங்களால் உணர முடிந்தது. அச்சிறுவனுடன் பேசும் நபர், நாங்கள் எல்லாவற்றையும் சாப்பிடப் போகிறோம் என்று மீண்டும் மீண்டும் ஏன் சொல்கிறார் .. அச்சிறுவனை உதவியற்றவராக உணர வேண்டாம், ”என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. “மிகவும் அழகாக. இந்த சிறிய வயதில், அவருக்கு அவ்வளவு இரக்கம் இருக்கிறது. மிகவும் தூய்மையானது”, மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|