Fun story – ஒரு கற்பனை கதை தான். சிரிக்க மட்டுமே..!
பார்வையற்ற மனிதர் ஒருவர் ஒரு ஹோட்டலில் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தார். அவர் அருகே வந்த ஓட்டல் முதலாளி, அவரை சரியாக கவனிக்காமல் அவரிடம்…
“சார்..மெனுகார்டு தரவா..பார்த்து ஆர்டர் செய்றீங்களா”…. என்று கேட்டார்.
அய்யா, நான் பார்வையற்றவன், அதனால் உங்கள் சமையலறையிலிருந்து சமையல் செய்த கரண்டிகளை கொண்டு வாருங்கள் அதை முகர்ந்து பார்த்தே எனக்குப் பிடித்தவற்றை நான் ஆடர் செய்கிறேன் என்றார்.
(இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம் ஏன் அந்த ஓட்டல் முதலாளி மெனு ஐட்டங்களை வாயால் சொன்னால் போதுமானதே என்று கேட்க தோணும். இது கதையில் லாஜிக் எல்லாம் மறந்துவிடுங்கள், குறுக்கு கேள்விகளை கேட்காதீர்கள்)
மேனேஜர் உள்ளே சென்று சில கரண்டிகளை கொண்டுவர, அவற்றை இந்த பார்வையற்ற மனிதர் முகர்ந்து பார்த்துவிட்டு..
“சார் ..எனக்கு ஒரு பிளேட் சில்லி சிக்கனும் சப்பாத்தியும் கொண்டு வாங்க”, என்றார்.
ஹோட்டல் முதலாளிக்கு ஒரே ஆச்சர்யம், எப்படி இவரால் கண்டுபிடிக்க முடிந்தது, அதுவும் வாசனையை வைத்தே அவ்வளவு சரியாக கண்டுபிடித்தார் என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.
இன்னொருநாள் பார்வையற்ற மனிதர் மீண்டும் அதே ஓட்டலுக்கு வந்தார், முன்போலவே கரண்டிகளை முகர்ந்து பார்த்து முட்டை பரோட்டாவும் மட்டன் சாப்சும் ஆர்டர் செய்தார். இது இவ்வாறு அவ்வப்போது தொடர்ந்து. மற்றொரு நாள் அதே பார்வையற்ற மனிதர் மீண்டும் ஓட்டலுக்கு வர, ஹோட்டல் முதலாளிக்கு எப்படியாவது இவரை நாம் இன்று ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தார். அதாவது இன்று அவரால் சரியாக உணவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
உடனே கிச்சன் உள்ளே சென்று அங்கே மேற்பார்வையிட்டு கொண்டிருந்த தனது மனைவி உமாவிடம் ஒரு கரண்டியை கொடுத்து, “உமா.. இதை உன் உதடுகளில் நன்றாக தேய்த்து எடு” என்றார். மனைவியும் அவ்வாறே செய்து கரண்டியை கொடுத்தார். ஓட்டல் முதலாளி அந்தக் கரண்டியை கொண்டுவந்து பார்வையற்றவரிடம் கொடுத்து, “இந்த உணவு ஐட்டத்தை முகர்ந்து பார்த்து கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்” என்றார்.
முகர்ந்து பார்த்து அந்தபார்வையற்ற மனிதர்… “சார்..சார்.. எனது கிளாஸ்மேட் உமா இங்குதான் வேலை பார்க்கிறாளா…? என்று கேட்டார்.
அவ்வளவு தான் ஓட்டல் முதலாளி மேஜைமேல் மயங்கிச் சாய்ந்தார்!!!😂😂😂
Fun story was end.
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|