பொறுமையின் பலன் – சிறுகதை | ஒரு நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். அங்கிருந்த வரவேற்பாளர் என்னை அழைத்துச் சென்று ஒரு டேபிலில் அமர வைத்தார்கள் பிறகு அவர்கள் கொடுத்த மெனு கார்டை நான் படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சிறிது நேரத்தில் ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். அவரவர் தேவைக்கேற்ப அவர்களுக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்தார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களுக்கான உணவு வந்தது. எல்லோரும் கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகி விட்டது. நான் ஆர்டர் செய்த உணவு இன்னும் வராமல் இருந்தது. அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தனர்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக சொன்னார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service…no need to wait like beggar என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு கொஞ்சம் கோபமும் வந்தது உடனே ஆட்டரை கேன்சல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரைக் கூப்பிட்டேன்.
வெயிட்டர் வந்து அமைதியாக என்னிடம் கூறினார்.
“உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதை எங்களுடைய தலைமை சமையல்காரர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி அதை அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார், அதனால் தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது மன்னிக்கவும்,” என்றார்.
இப்போது மற்றவர்கள் என்னை கொஞ்சம் மரியாதையாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களின் மனதிற்குள் ஏதோ ஒரு கேள்வி ஓடியது…. “ஏன் இவருக்கு மட்டும் தலைமை சமையல்காரர் செய்யும் அளவிற்கு இவர் என்ன அவ்வளவு சிறப்பு விருந்தினரா” என்று அவர்களின் பார்வையிலே எனக்குத் தெரிந்தது.
பொறுமையின் பலன்
நான் அமைதி ஆனேன். சற்று பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் எனக்கான என் உணவு வந்தது. அதை ஆறு வெயிட்டர்கள் ஒரு ராயல் சர்வீஸ் போன்று எனக்கு பறிமானார்கள். அப்பொழுதுதான் நான் கவனித்தேன் நான் ஆர்டர் கொடுத்தது ஒரு சாதாரண ஐட்டம் ஆனால் இங்கு பரிமாறப்பட்டு இருப்பது மிகவும் காஸ்ட்லியான உணவுகள். இவைகள் அனைத்தும் நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது, நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர் தான். அவர் இப்பொழுது பெரிய அந்தஸ்தில் இருப்பதால் நான் அவரை கண்டு கொள்ளாமல் நான் உணவருந்த டேபிளுக்கு வந்துவிட்டேன். ஆனால் அவன் என்னை ஆச்சரியப்படுத்துவதற்காக என்னுடைய சாதாரண உணவை ஸ்பெஷல் உணவாக மாற்றி தனது தலைமை சமையல்காரரை கொண்டு தயாரிக்கும் படி ஹோட்டல் மேனேஜரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. ஏளனமாக என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தங்களுக்கு மட்டும் ஏன் அத்தகைய ராயல் சர்வீஸ் கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.
அது தான் வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் தான் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தங்களுக்கு எல்லா செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் மாற்றம் வரவில்லையே வாழ்வில் என்று உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.
கவலைப்பட வேண்டாம், கடவுள் சில நேரங்களில் உங்களுக்கு ஒரு சிறந்ததொரு தருணத்தை ஏற்படுத்த சிறிது நேரம் ஆகலாம். இந்தக் கதையில் ஹோட்டல் அதிபர் என்பது தான் அவர் எப்பொழுதோ மற்றவருக்கு செய்கின்ற பலன்கள், அந்தப் பலனுக்கான பிரதிபலன் தான் தலைமை சமையல்காரர் என்ற கடவுள் அவருக்கு சிறந்ததொரு உணவை தந்தவர். அவருக்கான உணவை தயார் செய்வதற்கு நேரம் ஆவதை போன்று உங்கள் வாழ்வில் ஒரு சிறந்ததொரு வெற்றி அமைய சில நேரங்களில் கூடுதல் நேரம் தேவைப்படும். அதுவரை பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது. அதுவரை உன் கடமையை செய்து கொண்டே இரு!
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|