விவசாயி வாங்கிய ஹெலிகாப்டர், காரணம் கேட்டால் ஆடிபோய்வீர்கள்.
மகாராஷ்டிராவின் பிவாண்டி நகரத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் தொழில்முனைவோரான ஜனார்த்தன் போயர் தனது வணிக பயணங்களுக்காக நாடு முழுவதும் பயணம் செய்ய உதவும் வகையில் ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.
இவர் ஒரு கட்டுமானத் தொழில் நடத்திவருகிறார், போயர் சமீபத்தில் தான் பால் தொழிலில் இறங்கினார், தனது பால் வணிகம் காரணமாக அடிக்கடி அவர் நாட்டின் பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டது. தனது பயணத்தை வசதியாக மாற்ற, ரூ .30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் வாங்கியுள்தாக கூறினார்.
“நான் அடிக்கடி எனது வணிகத்திற்காக பயணிக்க வேண்டும், அதனால்தான் நான் ஒரு ஹெலிகாப்டர் வாங்கினேன். எனது பால் வாங்குவதையும் விவசாயத்தையும் கவனித்துக்கொள்வது எனக்கு அடிக்கடி தேவை” என்று ஜனார்த்தன் கூறினார்.
2.5 ஏக்கர் நிலப்பரப்பில், ஹெலிகாப்டருக்கு ஒரு கேரேஜ், ஒரு பைலட் அறை மற்றும் ஒரு தொழில்நுட்ப அறை ஆகியவற்றுடன் பாதுகாப்பு சுவருடன் ஹெலிபேட் கட்ட ஏற்பாடுகளை ஜனார்த்தன் போயர் ஏற்பாடு செய்துள்ளார்.
“எனது ஹெலிகாப்டர் மார்ச் 15 ஆம் தேதி வழங்கப்படும். எனக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது, அங்கு ஹெலிகாப்டருக்கு ஹெலிபேட் மற்றும் பிற வசதிகளை செய்வேன்” என்று ஜனார்த்தன் மேலும் கூறினார்.
பல பெரிய நிறுவனங்கள் பிவாண்டியில் கிடங்குகளைக் கொண்டுள்ளன, கிடங்கு உரிமையாளர்கள் வாடகைக்கு நல்ல கட்டணங்களைப் பெறுகிறார்கள். மெர்சிடிஸ், பார்ச்சூனர், பி.எம்.டபிள்யூ, ரேஞ்சர் ரோவர் மற்றும் பிற கார்களை கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் காணலாம். ஜனார்த்தன் போயரும் பல கிடங்குகளை வைத்திருக்கிறார், மேலும் அதில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்கிறார்.
விவசாயிகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை போல சிந்திக்கும் போதுதான் அவர்கள் மேலும் உயரடைவார்கள் என்பதற்கு ஜனார்த்தனன் போயர் ஒரு முன்னுதாரணம்.