நாம் வழக்கமாக வீட்டில் ஏதாவது மின்சாரம் குறைபாடு ஏற்ப்படால், மின்துறையில் புகார் செய்தால் மின்சார துறையில் இருந்து லைன்மேன் என்று அழைக்கப்படும் வல்லுநர் வந்து நம் வீட்டின் அருகில் இருக்கும் 8 மீட்டர் மின்சார கம்பத்தில் ஏறி குறைபாட்டை சரிசெய்வார். இந்த பதவியில் இதுவரை யாரும் பெண்கள் இருந்ததில்லை. காரணம் அந்த 8 மீட்டர் மின்சார கம்பத்தில் பெண்கள் ஏறுவது ஒரு சவாலாக இருக்கும். ஆனால் அந்த தடையை தெலுங்கான மாநிலத்தில் உள்ள இரு பெண்கள் உடைத்தெறிந்து இருக்கிறார்கள்.
இதுவரை ஆண்களுக்கு மட்டுமே இருந்த இந்த மின்சார துறை பதவியில் முதன் முறையாக இரு பெண்கள் நுழைந்து (India’s first linewomen) சாதித்திருக்கிறார்கள்.
ஆம், பாபுரி ஸ்ரீநிஷா (வயது 20) மற்றும் பாரதி (வயது, 32, இரு குழந்தைகளின் தாய்) ஆகிய இருவரும் ஐடிஐ முடித்துள்ளார்கள். தெலுங்கான மின்சார துறையில் “junior linemen” என்ற வேலைக்கு அவர்கள் இருவரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால் கம்பம் ஏறுவது பெண்களுகளால் முடியாது என்ற முறையில் மின்சாம் வழங்கும் நிறுவனம் அவர்களை தேர்வு ஏழுத விடாமல் தடுத்து உள்ளது. ஆனாலும் இவர்களின் விடா முயற்சியால் முதலில் எழுத்து தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பிறகு கம்பம் ஏறும் தேர்வில் நிறுவனம் தடுத்துள்ளது. இவர்கள் நீதிமன்றத்தை நாடியதன் மூலம் நீதிமன்றம் இவர்களை கம்பம் ஏறும் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கம்பம் ஏறும் தேர்வில் இவர்கள் இருவரும் ஒரே நிமிடத்தில் கம்பம் ஏறி தேர்வை முடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

India’s first linewomen
விரைவில் ஒரு நீதிபதி முன்னிலையில் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அவர்களும் linemen க்கு பதிலாக linewomen என்று அழைக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் அவர்களுக்கு உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சில பெண்கள் தினந்தோறும் வாட்ஸ்ஆப் ஸ்டேஸ் வைப்பது, மற்றவர்கள் வைத்த ஸ்டேஸ்களை பார்ப்பது, புதுவிதமாக சமையலை செய்யவில்லை என்றாலும் அடிக்கடி சமையல் வீடியோக்களை பார்த்துக்கொண்டே இருப்பது, விடாமுயற்சியுடன் மெகா சீரியல்களை நேரம் தவறாமல் தொடர்ந்து பார்ப்பது, கொஞ்சம் கூட வாழ்கைக்கு தேவைப்படாத விஷயங்களில் கவனத்தை செலுத்துவது போன்ற அற்பமான செயல்களை மட்டுமே செய்து வாழ்கையில் என்ன சாதித்தோம் என்ற கேள்வி கூட தங்களுக்குள்ளாகவே கேட்க்காமல் காலத்தை கடத்தி சிலர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
Learn more languages from our website https://learn.lifeneeye.com/