கணவனைக் கொலை செய்த கர்ப்பிணி
இருபத்தோரு வயதுள்ள ஒரு கர்ப்பிணி, அந்தியூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் முன்னிலையில் தன் கணவனை உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொன்றதாக சொல்லி சரணடைந்தார், பிறகு அவர் அவளை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
பெரியம்மோலாபாளையத்தைச் சேர்ந்த மைதிலி (வயது 21) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் கிராமம் அருகில் காளியண்ணன் தோட்டத்தை சேர்ந்த நந்த குமார் (வயது 33) என்பவரை திருமணம் செய்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர் கர்பபம் தரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தம்பத்திய வாழ்க்கையை மைதிலி தவித்து வந்துள்ளார். ஆனால் மைதிலியின் கணவர் நந்தகுமார் தொடர்ந்து தன் மனைவியை தன்னுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என வற்புறுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மைதிலி, தன் கணவனை கொல்ல திட்டமிட்டு ஜனவரி 28ம் தேதி உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ரவி அவர்கள் மைத்திலியிடம் விசாரணை செய்த பிறகு இவ்வாறு தெரிவித்தார்.
பிறகு ஜனவரி 31ஆம் தேதி நந்தகுமார் சில உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தொடர் சிகிச்சைக்குப் பின்னும் அவர் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 15ஆம் தேதி இறந்தார். மருத்துவமனை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி இது பற்றி மேலும் விசாரணை செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் மைதிலி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளார். மைதிலியின் அறிக்கையின்படி காவல்துறை அவரை கைது செய்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
அதிலிருந்து நாம் கற்கக்கூடிய பாடம் என்ன?
- கட்டிய மனைவியாக இருந்தாலும் அவளுடைய அனுமதியின்றி அவளைத் தொடுவது ஒரு தவறான ஆண்மகனின் செயல்.
- தாம்பத்தியம் என்பது இருவருக்கும் ஆசை இருக்கின்ற நேரத்தில் அனுபவிக்க வேண்டும் அதை கட்டாயப்படுத்துவது என்பது ஒரு வீரமற்ற செயல்.
- பெண் என்றாலே சிலர் இன்னமும் அவர்கள் அடிமைகள் என்று சில ஆண்மையற்ற ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- அந்தப் பெண் குறைந்தபட்சம் இது பற்றி யாரிடமாவது கலந்து ஆலோசனை செய்து இருக்கலாம். இல்லை ஒரு மருத்துவரை அணுகி இதற்கு ஒரு தீர்வை கண்டிருக்கலாம்.
allegedly – கூறப்படுகிறது
judicial custody – நீதித்துறை காவல்
confess – ஒப்புதல் வாக்குமூலம்
insecticide – பூச்சிக்கொல்லி
insisting on – வலியுறுத்துகிறது