சென்னை நீலாங்கரையயை சேர்ந்த ஒரு கடைக்காரர் கடந்த வியாழக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்.
சென்னை, நீலாங்கரையில் பாரதியார் நகரில் முருகேசபாண்டியன் (வயது 28) என்பவர் ஒரு மளிகை கடை நடத்தி வந்துகொண்டிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடித்துவிட்டு கடைக்கு உள்ளேயே ஷட்டரை மூடிவிட்டு தூங்கியிருக்கிறார். சில நேரம் கழித்து கடைக்கு உள்ளே கொஞ்சம் அனல் அதிகமாக இருந்த காரணத்தால் அவருக்கு வியர்த்து இருக்கிறது. இதனால் குளிர்சாதனப் பெட்டியை(Refrigerator) கொஞ்சம் திறந்து வைத்தால் அறை கொஞ்சம் குளிராக இருக்கும் என்று கருதி குளிர்சானப்பெட்டியை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற சிலர் மூடிய கடைக்குள் இருந்து புகை வருவதை கண்டு காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே அவர் பல தீக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் டாக்டர்கள் அவர் மின்சாரம் தாக்கி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
எப்பொழுதும் எந்தப்பொருள் எதற்கு பயன்படுத்தப்பட வேண்டுமோ அதற்கு மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல் அதை வழக்கமான பராமரிப்பு செய்யவும் தவறவிடக் கூடாது. எலக்ட்ரானிக் சாதனங்களை முறையான பராமரிப்பு இல்லாமல் கையாள்வது மிகவும் ஆபத்தானது.