நான் முதலமைச்சரானால் போடும் முதல் கையெழுத்து என்ற என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்பு நம்முடைய யூடியூப் சேனல் மற்றும் முகநூல் பக்கத்தில் கழிப்பறை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருந்தோம்.
படிக்கும் பெண்களுக்கும் வீட்டில் வீட்டில் உள்ள பெண்களுக்கும் இயற்கை உபாதைகளை எந்தவித பயமும் இல்லாமல் பாதுகாப்பாக கழிப்பதற்கு மிகவும் அத்தியாவசமான ஒன்று கழிப்பறை.
கருவறை இல்லாத வீடுகள் கூட இருக்கலாம் அதனால் ஆண்டவன் ஒருபொழுதும் நம்மை தண்டிப்பதில்லை.
ஆனால் கழிவறை இல்லாத வீடுகள் என்பது ஆதிமனிதனை போல படிப்பறிவு இல்லாமல் இந்த 2021-ல் வாழ்வதற்கு சமம். ஆனால் இங்கு சிலர் அறிவிருந்தும் வசதியற்ற காரணத்தால் கழிப்பறை வசதியை தம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதற்காக அந்த வீடியோவின் முடிவில் ஒரு Toilet facility required லிங்க் ஏற்படுத்தியிருந்தோம்.
Toilet facility
அதில் தங்கள் வீட்டில் கழிப்பறை வசதி (Toilet facility required) இல்லாதவர்கள் தங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்ய கேட்டிருந்தோம். தற்பொழுது இதுவரை இரண்டு பேர் தங்களுடைய வீடுகளில் கழிப்பறை வசதி வேண்டி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
எந்த உதவியாக இருந்தாலும் அது சரியான பயனாளிகளுக்கு சேர வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணம் ஆகவே இருக்கும் அது போல தான் எங்களுக்கும். ஆனால் விண்ணப்பித்த இருவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் கலபாக்கம் தாலுக்காவை சேர்ந்தவர் மற்றும் திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்தவர். இந்த இரண்டு பகுதிகளில் எவரேனும் ஒருவர் அந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்து உண்மையில் அவர்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்களா என்று கண்டறிய வேண்டும்.
தன்னார்வலர்கள் எவரேனும் இந்த இடங்களுக்கு அருகாமையில் இருந்தால் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் ஏழ்மை நிலை குறித்து ஆராய்ந்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். உண்மையில் அவர்களின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா? அவர்களின் பொருளாதார நிலை எப்படி? வீட்டில் எத்தனை பெண்கள் உள்ளனர்? போன்றவற்றை கண்டறிந்து உண்மையான பயனாளிகளை அடையாளம் கான வேண்டும்.
கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் இரவில் ஒதுக்கு புறமான இடத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்லும் நேரத்தில் ஒரு காமமிருகத்தால் அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சித்துள்ளான். ஆனால் அந்த தைரியம் நிறைந்திருந்த இளம்பெண் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்த வந்தவனை அவனுடைய கத்திக்கொண்டே அவனை கொலை செய்திருக்கிறாள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம், காவல் துறையும் அந்த வழக்கிலிருந்து அந்த பெண்ணை விடுவித்திருக்கிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் இதுபோல பெண்களுக்கு சாதகமாக ஏற்பட வாய்ப்பில்லை. சில குழந்தைகளுக்கு இது போல சம்பவம் மனரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது.
இத்தயைய கழிப்பறை வசதி இல்லாத சரியான பயனாளிகளை கண்டறிய சிரத்தை எடுப்பதின் காரணம் இனி எந்த ஒரு பெண்ணும் இயற்கை உபாதை கழிக்க வெளியே செல்லக்கூடாது என்பதன் நோக்கம் மட்டுமே. அவர்கள் சுதந்திரமாகவும் பயம்மில்லாமல் சுகாதாரமாக வீட்டிலேயே இயற்கை உபாதகளை கழிக்கவேண்டும் என்பதே இலக்கு.
நீங்கள் சமுக அக்கறையோடு இருக்கும் பட்சத்தல், உதவி செய்யும் எண்ணமிருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அத்தகைய பயனாளிகளை உங்களால் சரியாக அடையாம் கண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். ஒருவேளை உங்களால் அத்தகைய கழிப்பறை வசதியை அந்த பள்ளி குழந்தைகளுக்கு செய்ய முடியும் என்றாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி!