விவசாயம் அழிந்து கொண்டிருப்பதற்கு காரணம்??? விவசாயிகளே
ஆம், சில பெரிய விவசாயிகள் தங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி வங்கி மேலளாருக்கு கைக்கூலி கொடுத்து வங்கிகளில் லட்சக்கணக்கில் கடனை வாங்கி, அதை திருப்பி அடைக்க கூடிய வசதி இருந்தும் கட்டாமல் அரசு மூலமாக தள்ளுபடிக்கு காத்து அதையும் பெற்று விடுகிறார்கள்.
சிறு விவசாயிகள் ஒரு 50000 கடனை வாங்கி, அதை கட்ட முடியாமல் இருக்கும் பொழுது, வங்கி மூலமாக அடியாட்கள் விட்டு அடாவடியாக வசூலிக்கிறார்கள். இதனால் அவர்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள், சிலர் இறந்தும் விடுகிறார்கள்.
கடந்த தி.மு.க ஆட்சியில் 6500 கோடி கடனை ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தாக போட்டு தள்ளுபடி செய்தார்கள். அதில் அதிகம் பயன்பெற்றவர்கள் அறுவடை இயந்திரம் வாங்கியவர்களுக்கும், டிராக்டர் வாங்கியவர்களும் கட்சிகார்களும் தான்.
ஒரு பழமொழி உண்டு, பசிக்கு மீன் கொடுப்தைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பார்கள். அதுபோல தான், விவசாயிகளுக்கு ஒவ்வொரு முறையும் பாதிப்பு ஏற்படும் பொழுது அதற்க்கு போராடி நிவாரணம் பெறுவதை விட பாதிப்பே ஏற்பாடாமல் அவர்களுக்கு அனைத்து முன்னேற்பாடான வசதிகளை செய்து தரவேண்டும்.
சிறுவிவசாயிகளை பாதுகாக்க அரசு உடனடியாக மூன்றே விஷயங்களில் நடவடிக்கை எடுத்தால போதும்.
1. நீர் நிலைகளை பாதுகாத்தல்
விவசாயத்திற்கு தேவையான நீர்நிலைகளான ஏரி, குளம் போன்றவற்றை ஆராய்ந்து அதனை செழுமை படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக அணை குளம், ஏரி போன்றவற்றின் மூலமாக நீரை சேமித்து வைக்க பாடுபட வேண்டும்.
2. கூட்டு விவசாயம்
ஒரே மண்ணில் தொடர்ந்து விவசாயம் செய்வதால் மண்ணில் வளம் குறைந்து காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஏக்கரும் சரியான சமமாக இல்லாம் இருப்பதால் அதிநவீன விவசாய கருவிகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் ஏக்கராவது ஒரே சமமாக சமன்செய்து, அந்த நிலத்திற்கு உரிமையாளர்கள் ஒன்றாய்சேர்ந்து கூட்டு விவசாயம் செய்ய வேண்டும். மகளிர் குழு போல் விவசாய குழுக்கள் அமைத்து ஒன்றாக விவசாயத்தில் ஈடுபடவேண்டும். இதனால் அதிகபடியான மகசூல் கிடைக்கும் மற்றும் பெறுமளவு இழப்பு தவிர்க்கப்படும்…
3. விவசாய வல்லுனர்
ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர் இருப்பது போல், படித்த ஒரு விவசாய நிபுணரும் பணியில் அமர்த்த வேண்டும். அவர்கள் மூலமாக தகுதியானவர்களுக்கு கடன் வழங்குவது, விவசாய மூலப்பொருட்களுக்கு மானியம் பெற்று தருவது, விவசாய யுக்திகளை விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற பணிகளை அவர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும்.
சிறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனும் பெறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனும் வழங்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கு மேல் வழங்கும் கடன்களுக்கு எக்காரணத்திற்கும் தள்ளுபடி செய்ய கூடாது. ஏன்னென்றால் ஒரு லட்சத்திற்கு மேல் கடன் வாங்குபவர்கள் யாரும் விவசாயத்திற்காக அத்தொகையை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்.
ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று வங்கியில் கடன் கேட்டால், ஆயிரம் வழிமுறைகளை சொல்லி தவிர்க்கிறார்கள், இல்லை செக்கியூரிட்டியாக பத்திரம் முதல் பட்டதாரி சான்றிதழ் வரை அணைத்தையும் வாங்கி கொள்கிறார்கள். ஒருவேளை தொழில் நட்டமடைந்தால் ஒருநாளும் அந்த கடனை தள்ளுபடி செய்வதில்லை,அது போல தான் எந்த ஒரு கடனை தள்ளுபடி செய்தாலும் அது நாட்டிற்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை தடுக்கும். பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக எந்த ஒரு தொகையும் ஒதுக்க முடியாது.
தள்ளுபடி செய்யும் தொகையை நாட்டின் விவசாய வளர்ச்சிக்கா முழுமையாக செயல்படுத்தினால் பிறகு மீண்டும் இதுபோல் விவசாயிகள் போராட வேண்டிய அவசியம் இருக்காது.
வளர்க விவசாயம்… வாழட்டும் விவசாயி
– ஜெ.பி.