ஹாய் பிரண்ட்ஸ்!!
இன்றிலிருந்து நாம் ஒரு காதல் கதை வழியாக மலையாளம் (Learn Malayalam through Tamil story based) கற்க இருக்கிறோம். தினம்தோறும் கதை மூலம் மலையாளத்தில் சில வார்த்தைகளையும் வாக்கியங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும்படி கதையில் நான் சொல்ல போகிறேன். மலையாளம் எழுத்துக்களை படிக்க தெரியாதவர்கள் எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து வெறும் 3 மணி நேரத்தில் மலையாளம் எழுத்துக்களை எளிமையாக புரிந்து கொள்ளும் படி நன்றாகத் விளக்கி உள்ளோம். கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி வீடியோக்ளை பார்க்கவும்.
பாரதியார் பாடுவது போல “கேரள நாட்டிளம் பெண்களுடனே…..” அது ஏனோ எனக்கும் ஏன் அவ்வளவு அழகு கேரள பெண்கள் என்று தெரியவில்லை. அதற்காக மற்ற மாநில பெண்கள் அழகு இல்லை என்று கூறிவிட முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் அழகு நிறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் உண்மையான பேரழகு. அது அன்பை வெளிப்படுத்துவதிலும், நடக்கும் நடையிலும், உடுக்கும் உடையிலும், நாணத்திலும், உண்ணும் முறையிலும் இது போன்ற பலவற்றிலும் கனகச்சிதமாக நடந்து கொள்ளும் பெண்கள் எப்பொழுதும் பேரழகு தான்.
அப்படிப்பட்ட ஒரு பேரழகியான என் காதலியை கேரளா சென்று நேரில் சந்திக்க நான் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
அவள் ஒரு மல்லிகை. நாம் தமிழில் மல்லிப்பூ என்று சொல்கிறோம் இல்லையா, அது தான் மலையாளத்தில் മുല്ലപ്പൂവ് (Mullappoov)
jasmine – മുല്ലപ്പൂവ് (முல்லப்பூவ்)
(மலையாளத்தில் உள்ள கூட்டெழுத்துக்கள் அனைத்தும் நம்முடைய யூடியூப் சேனலில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
She is a beautiful girl.
അവൾ സുന്ദരിയായ പെൺകുട്ടിയാണ്.
(Aval sundariyaaya penkuttiyaanu.)
she – അവൾ
girl – പെൺകുട്ടി
a – ഒരു
is – ആണ്
Is என்பதை தமிழில் இருக்கிறது என்று சொல்கிறோம் இல்லையா அது போல மலையாளத்தில் ആണ് (Aanu) என்று சொல்வார்கள்.
நாம் தமிழில் அழகு, அழகான என்று சொல்கிறோம் இல்லையா அதுதான் மலையாளத்தில்….
beautiful – മനോഹരമായ, സൗന്ദര്യമുള്ള
(Manoharamaaya, saundaryamulla)
What a beautiful girl!
എന്ത് സുന്ദരിയായ പെൺകുട്ടി!
Enthu sundariyaaya penkutti!
நான் இதுவரை அவளை நேரில் கண்டதில்லை
ഞാൻ ഇതുവരെ അവളെ നേരിട്ട് കണ്ടിട്ടില്ല
Njaan ithuvare avale nerittu kandittilla
என்னையா….. நேரில் பார்க்காத பெண்ணை பற்றி இவ்வளவு அதிகமாக வர்ணனை செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நேரில் தான் பார்க்கவில்லை ஆனால் புகைப்படத்தில் அவளை முழுவதுமாக ரசித்திருக்கிறேன்.
I like her
ഞാൻ അവളെ ഇഷ്ടപ്പെടുന്നു
Njaan avale ishtappetunnu
அந்த தேவதை என்னை நேரில் வந்து சந்திக்கச் சொன்னாள். அவளை பார்த்தால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும், அப்படி இருக்க அவளே என்னை அழைத்திருக்கிறாள் என்றால் நாம் கிளம்பாமல் இருப்பமா? நீங்களே சொல்லுங்கள்.
angel – മാലാഖ (Maalaakha)
so, I am planning to see her in person
അതിനാൽ ഞാൻ അവളെ നേരിട്ട് കാണാൻ പദ്ധതിയിടുന്നു
(Athinaal njaan avale nerittu kaanaan paddhathiyitunnu)
ஆனால் அவளுடன் எப்படி மொழி பிரச்சினை இல்லாமல் பேசுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? எனக்கு கொஞ்சம் மலையாளம் தெரியும்.
I know a little bit Malayalam
എനിക്ക് കുറച്ച് മലയാളം അറിയാം
Enikku kuracchu malayaalam ariyaam
I can understand
എനിക്ക് മനസ്സിലാക്കാൻ കഴിയും
மொழி ஒரு பிரச்சனை இல்லையென்றாலும் எனக்கு வேறு ஒரு பிரச்சனை உள்ளது, அது என்னென்ன…..
I am vegetarian
ഞാൻ സസ്യഭുക്ക് ആണ്
Njaan sasyabhukku aanu
but, she is non-vegetarian
പക്ഷേ, അവൾ മാംസാഹാരിയാണ്
pakshe, aval maamsaahaariyaan
கதை தொடரும்…….
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கே பதிவிடவும், பேஸ்புக்கில் ஷேர் செய்யவும்.