இந்தியை கற்றுக்கொள்ள வந்த அனைவரையும் வரவேற்கிறோம். இது Learn Hindi through Tamil – Part 03 ஆகும். வழக்கமாக அனைவரும் கற்றுத் தரும் பாடம் அல்ல. இந்தப் பாடங்கள் அனைத்தும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்முடைய வலைதளத்திலும் அல்லது ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்தி பாடங்களை கற்றுக் கொண்டே வாருங்கள். விரைவில் நீங்கள் எளிதாக இந்தி பேசுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
சில உயிர் எழுத்துக்களை தற்பொழுது பார்ப்போம். இவைகள் அனைத்தும் தமிழில் இருக்கின்ற அதே உச்சரிப்பு தான்.
अ – அ
आ – ஆ
इ – இ
ई – ஈ
उ – உ
ऊ – ஊ
ए – ஏ
ऐ – ஐ
ओ – ஒ
औ – ஓள
ஏற்கனேவ சில மெய் எழுத்துக்களை படித்தீர்கள். அவை மீண்டும் ஒருமுறை நினைவூட்டலுக்காக தற்பொழுது.
क – க
ज – ஜ
त – த
न – ந/ன
प – ப
म – ம
ण – ண
य – ய
र – ர
ल – ல
தற்பொழுது மேலும் சில மெய் எழுத்துக்களை பார்க்கலாம்.
தமிழில் ஒரு க மட்டும் தான் உள்ளது. ஆனால் இந்தியில் க வரிசையில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
क – க (ka) தமிழில் இருக்கும் அதே க உச்சரிப்பு
ख – க்கஹ (kha) க்க வுடன் ஹ சேர்த்து உச்சரிப்பு, கஜானா (खजाना) என்ற சொல்லில் இருக்கும் (kha) என்ற உச்சரிப்பு
ग – க (ga) गायत्री (Gayathri) காயத்ரி என்ற பெயரில் இருக்கும் (ga) என்ற உச்சரிப்பு
घ – (gha) watch (घड़ी) கடிகாரம் (ghadikaram) என்ற சொல்லில் இருக்கும் (gha) என்ற உச்சரிப்பு
இதுவரை நீங்கள் மூன்று பதிவுகளில் மொத்தம் 13 உயிரெழுத்துகளில் 10-ம் 33 மெய்யெழுத்துகளில் 13-ம் ஆக மொத்தம் 23 எழுத்துகள் படித்துவிட்டீர்கள்.

சில நெடில் எழுத்துகளைப் நினைவூட்டுகிறோம். க, கா எழுதுவது போல…
का – kaa
खा – khaa
गा – gaa
घा – ghaa
जा – jaa
ता – taa
ना – naa
पा – paa
मा – maa
णा – Naa
या – yaa
रा – raa
ला – laa
இப்பொழுது சில வார்த்தகளைப் பார்ப்போம்.
गला (gala) – neck கழுத்து
घर (ghar) – home வீடு
गरम (garam) – hot சூடான
खजाना (khajaana) – treasury கருவூலம்
गलत (galat) – wrong தவறு
काम (kaam) – work வேலை
एक (ஏக்) one ஒன்று
गलत (galat) mistaken தவறாக
मगर (magar) but ஆனால்
माता (maata) Mother அம்மா
गाय (gaay) cow பசு மாடு
आप (aap) You நீங்கள், தாங்கள்
मत (mat) don’t கூடாது
लाना (laana) bring கொண்டுவா
இதே போல ஆங்கிலத்தையும் எளிதாக கற்றுக் கொள்ள எங்களை தொடர்பு கொள்க. WhatsApp +918610924459
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |