இந்தியை கற்றுக்கொள்ள வந்த அனைவரையும் வரவேற்கிறோம். இது Learn Hindi through Tamil – Part 05 ஆகும். வழக்கமாக அனைவரும் கற்றுத் தரும் பாடம் அல்ல. இந்தப் பாடங்கள் அனைத்தும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்முடைய வலைதளத்திலும் அல்லது ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்தி பாடங்களை கற்றுக் கொண்டே வாருங்கள். விரைவில் நீங்கள் எளிதாக இந்தி பேசுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இந்த ஐந்தாவது பகுதியோடு நீங்கள் அனைத்து உயிர் மெய் எழுத்துக்களையும் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முந்தைய நான்கு பகுதிகளையும் மறக்காமல் படித்துவிட்டு இந்த ஐந்தாவது பகுதியை படிக்கவும்.
Part – 01 | Part – 02 | Part – 03 | Part – 04
ஏற்கனவே க, ச்ச, ட வரிசையில் உள்ள எழுத்துக்களை படித்து விட்டீர்கள். இப்பொழுது த வரிசை மற்றும் ப வரிசையில் உள்ள எழுத்துக்களை பார்க்க இருக்கிறீர்கள்.
த வரிசை
त – த – தமிழில் உள்ள அதே உச்சரிப்பு
थ – த்ஹ என்ற உச்சரிப்பு
द – தயவு, தர்மம் என்ற சொல்லில் உள்ள த உச்சரிப்பு
ध – தரணி என்ற பெயரில் உள்ள த்தஹ Dha உச்சரிப்பு Dharani धरणी
ப வரிசை
प – ப – தமிழில் உள்ள அதே உச்சரிப்பு
फ – pha ஃபாத்திமா என்ற சொல்லில் உள்ள ஃப உச்சரிப்பு ( फातिमा )
ब – அமிதாப் பச்சன் என்ற பெயரில் உள்ள Bachchan என்ற சொல்லில் இருக்கும் Ba உச்சரிப்பு ( बच्चन )
भ – பாரதி உள்ள பெயரில் உள்ள Bha (ப்பஹ) உச்சரிப்பு Bharathi भारती
எவ்வளவு எளிமையாக இதுவரை உயிர் மெய் எழுத்துக்கள்(33) அனைத்தும் நீங்கள் கற்று விட்டீர்கள்.

क | ka |
ख | Kha |
ग | Ga |
घ | Gha |
ङ | nga |
च | cha |
छ | chha |
ज | ja |
झ | jha |
ञ | nja |
ट | Ta |
ठ | Tha |
ड | Da |
ढ | Dha |
ण | Na |
त | ta |
थ | tha |
द | da |
ध | dha |
न | na |
प | pa |
फ | pha |
ब | ba |
भ | bha |
म | ma |
य | ya |
र | ra |
ल | la |
व | wa |
श | sha |
ष | shha |
स | sa |
ह | ha |
இனி வரும் பாடங்களில் நிறைய வார்த்தைகளை படிக்க இருக்கிறீர்கள் அதுவும் ஆடியோவுடன் கேட்கலாம். இந்தப் பாடங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த சிறு அன்பளிப்பை வழங்கி ஆதரவு தாருங்கள். எங்களுடைய 8610924459 என்ற எண்ணில் PhonePe லோ அல்லது 8610924459@ybl என்ற UPI id லோ வழங்கவும். நன்றி.
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459